• Mar 11 2025

பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முடக்கப்பட்டுள்ள இஸ்லாமாபாத்!

Tamil nila / Nov 24th 2024, 10:28 pm
image

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அந்த நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி நாடு தழுவிய ரீதியில் பல்வேறு வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

 போராட்டங்களின் ஒரு பகுதியாக இம்ரான்கானின் ஆதரவாளர்களால் இஸ்லாமாபாத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட இருந்தது. 

 இந்தப் பேரணியைத் தடுக்கும் வகையில் இஸ்லாமாபாத் நகர் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 பாதுகாப்புக் காரணங்களுக்காக பல்வேறு இடங்களில் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

 இதனிடையே, இஸ்லாமாபாத்தில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முடக்கப்பட்டுள்ள இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அந்த நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி நாடு தழுவிய ரீதியில் பல்வேறு வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  போராட்டங்களின் ஒரு பகுதியாக இம்ரான்கானின் ஆதரவாளர்களால் இஸ்லாமாபாத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட இருந்தது.  இந்தப் பேரணியைத் தடுக்கும் வகையில் இஸ்லாமாபாத் நகர் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  பாதுகாப்புக் காரணங்களுக்காக பல்வேறு இடங்களில் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.  இதனிடையே, இஸ்லாமாபாத்தில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement