• May 18 2024

இந்திய இழுவைப்படகுகளால் அழிக்கப்படும் தீவக கடல் வளங்கள்...! யாரும் கண்டுகொள்வதில்லை...!கனகசபை கண்டனம்..!samugammedia

Sharmi / Sep 1st 2023, 4:15 pm
image

Advertisement

தீவகத்தின் நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ,எழுவைதீவு என தீவகங்கள் பிரிக்கப்பட்டு இந்த பிரதேசங்கள் எமது  சிறு தொழிலாளர்கள் தொழில்செய்யும் இடங்கள் எல்லாம் இந்திய இழுவைப்படகுகள் வருகை தந்து அழித்து விடுகின்றது இதனை யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை என தீவகம் தெற்கு பிரதேச சபை வேலணைக்குட்பட்ட கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் ஆறுமுகம் கனகசபை தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால்  இன்று(1) காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல ஆண்டுகளாக இந்த இந்திய இழுவைப்படகுகளால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதும் இங்குள்ள மக்களிற்கு உணவு இல்லாமல் போனதும் இந்த இழுவைப்படகுகளால் மாத்திரமே. தீவகத்தை வந்து யாருமே எட்டிப்பார்ப்பது கிடையாது

அந்த பிரதேசங்களினுடைய வளங்களை அழிப்பது மட்டுமே இந்த இழுவைப்படகின் நோக்கமாக உள்ளது. இதனை வருகின்ற இந்தியத்துறை பாதுகாப்பு அமைச்சர் கருத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

நெடுந்தீவு தொடக்கம் மன்னார் வரையான இடைப்பட்ட தூரத்தில் இந்த இழுவைப்படகுகள் வந்து நிற்கின்றன அங்கு இலங்கை ரானுவத்தினரும் கடற்படையினர் ஆகியவர்கள் காவலில் இருக்கின்றார்கள் இந்த இழுவைப்படகுகள் வந்து வளங்களை அழிப்பதை பார்வையிட்டு கொண்டு இருக்கின்றார்கள்
 
இதனை டக்ளஸ் தேவானந்தா கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் பாதுகாப்பு அமைச்சர் இங்கே வருகின்ற போது இந்தியாவில் இருந்து வருகின்ற போதைப்பொருளுக்கு இலங்கையினுடைய கடற்படை பாதுகாப்பாக இருக்கின்றார்கள்

சென்ற வாரத்திலே மன்னாரிலே போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளதாக பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொண்டோம் இதற்கு இவர்கள் அனைவருமே உடந்தையாக இருக்கின்றார்கள் என்பதை நான் நேரடியாக சுட்டிக்காட்டுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் இவர்களுடைய பாதுகாப்பு இருக்கும் போது இந்த கடத்தல் காரரும் கஞ்சாப்போதைப்பொருட்களும் இங்கு வந்து செல்லுகின்றது எனவே இதனை கருத்திற்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு முன் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப்படகுகளால் அழிக்கப்படும் தீவக கடல் வளங்கள். யாரும் கண்டுகொள்வதில்லை.கனகசபை கண்டனம்.samugammedia தீவகத்தின் நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ,எழுவைதீவு என தீவகங்கள் பிரிக்கப்பட்டு இந்த பிரதேசங்கள் எமது  சிறு தொழிலாளர்கள் தொழில்செய்யும் இடங்கள் எல்லாம் இந்திய இழுவைப்படகுகள் வருகை தந்து அழித்து விடுகின்றது இதனை யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை என தீவகம் தெற்கு பிரதேச சபை வேலணைக்குட்பட்ட கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் ஆறுமுகம் கனகசபை தெரிவித்துள்ளார்.இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால்  இன்று(1) காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பல ஆண்டுகளாக இந்த இந்திய இழுவைப்படகுகளால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதும் இங்குள்ள மக்களிற்கு உணவு இல்லாமல் போனதும் இந்த இழுவைப்படகுகளால் மாத்திரமே. தீவகத்தை வந்து யாருமே எட்டிப்பார்ப்பது கிடையாது அந்த பிரதேசங்களினுடைய வளங்களை அழிப்பது மட்டுமே இந்த இழுவைப்படகின் நோக்கமாக உள்ளது. இதனை வருகின்ற இந்தியத்துறை பாதுகாப்பு அமைச்சர் கருத்தில் கொண்டு செல்ல வேண்டும்.நெடுந்தீவு தொடக்கம் மன்னார் வரையான இடைப்பட்ட தூரத்தில் இந்த இழுவைப்படகுகள் வந்து நிற்கின்றன அங்கு இலங்கை ரானுவத்தினரும் கடற்படையினர் ஆகியவர்கள் காவலில் இருக்கின்றார்கள் இந்த இழுவைப்படகுகள் வந்து வளங்களை அழிப்பதை பார்வையிட்டு கொண்டு இருக்கின்றார்கள் இதனை டக்ளஸ் தேவானந்தா கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் பாதுகாப்பு அமைச்சர் இங்கே வருகின்ற போது இந்தியாவில் இருந்து வருகின்ற போதைப்பொருளுக்கு இலங்கையினுடைய கடற்படை பாதுகாப்பாக இருக்கின்றார்கள் சென்ற வாரத்திலே மன்னாரிலே போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளதாக பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொண்டோம் இதற்கு இவர்கள் அனைவருமே உடந்தையாக இருக்கின்றார்கள் என்பதை நான் நேரடியாக சுட்டிக்காட்டுகின்றேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் இவர்களுடைய பாதுகாப்பு இருக்கும் போது இந்த கடத்தல் காரரும் கஞ்சாப்போதைப்பொருட்களும் இங்கு வந்து செல்லுகின்றது எனவே இதனை கருத்திற்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு முன் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement