• Jun 26 2024

இழுவைப் படகுகள் விவகாரம்..! இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வினை பெற்றுத் தாருங்கள்...! அன்னரசு அன்வேட் டைட்டட் தெரிவிப்பு..!samugammedia

Sharmi / Sep 1st 2023, 4:26 pm
image

Advertisement

எமது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்தியன் இழுவைப்படகுகள் அனைத்தும் எமது எல்லைக்கு வந்து சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் எமது கரையில் இருந்து சுமார் ஜந்து கிலோ மீட்டர் தூரத்துக்குள் வந்து அவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் வளங்களையும் அழித்துச்செல்கின்றார்கள் என கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தலைவர் அன்னரசு அன்வேட் டைட்டட் தெரிவித்தார்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால்  இன்று(1) காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இந்திய இழுவைப் படகுகளை எமது இலங்கை கடற்படையினர் பிடிக்காது ஏனோ தானோ என்று பிரச்சனைகளை விட்டுவிட்டு இருக்கின்றார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை நாம் இந்தியன் இழுவைப் படகுகளை கைது செய்கின்றோம் என்று கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் கைது செய்யப்பட்டதாக எமக்கு தெரியவில்லை.  அவர்கள் கைது செய்கின்றார்கள் தான் தமது எல்லைகளை விட்டு வெளியே செல்லும் போது  கச்சதீவிற்கு அண்மையில்  வைத்து கைது செய்கின்றார்கள். ஆனால் அங்கு வைத்து கைது செய்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை
நேற்று முன்தினம் கூட எமது தொழிலாளர்களின்  2 லட்சம் பெறுமதியான திருக்கை வலைகளை அழித்து சேதப்படுத்தியுள்ளனர். கௌரவ கடற்தொழில் அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பதாகவும் கிட்டத்தட்ட சங்கப்பணியில் ஈடுபட்டு எட்டு வருடங்கள் ஆகியுள்ளதாகவும் எட்டு வருடங்களாக தாங்கள் பிரச்சனைகளை முன் வைத்து வருவதாகவும் தமக்கு எந்த விதமான தீர்வும் கிடைக்கப்படவில்லை.

எனவே உடனடியாக கடற்தொழில் அமைச்சராக இருந்தாலும் சரி கௌரவ ஜனாதிபதியாக இருந்தாலும் சரி உடனடியாக இந்தியாவிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி எமக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது பிரதேசத்திலே அதாவது எமது இலங்கைத்தீவிலே கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை இடம்பெற்று வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் போதைப்பொருட்கள் தான் அந்த போதைப்பொருட்கள் விற்பனையாவதற்கு காரணம் பெரும்பாலும் இந்தியன் இழுவைப்படகுகளாக இருக்கலாம்.

ஆனால் அவர்கள் இழுவை மடித்தொழில் செய்வதற்காக அவர்கள் இங்கு வருகின்றார்கள் என்றே கூறுகின்றார்கள் ஆனால் இந்தியன் இழுவைமடி படகு தான் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை எமது இழுவைப்படகுகளிற்கு விற்பனை செய்கின்றார்கள்.

அந்த வகையில் அனைத்து இழுவைப்படகுகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் எங்களுக்கான தீர்வினையும் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்

இழுவைப் படகுகள் விவகாரம். இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வினை பெற்றுத் தாருங்கள். அன்னரசு அன்வேட் டைட்டட் தெரிவிப்பு.samugammedia எமது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்தியன் இழுவைப்படகுகள் அனைத்தும் எமது எல்லைக்கு வந்து சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் எமது கரையில் இருந்து சுமார் ஜந்து கிலோ மீட்டர் தூரத்துக்குள் வந்து அவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் வளங்களையும் அழித்துச்செல்கின்றார்கள் என கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தலைவர் அன்னரசு அன்வேட் டைட்டட் தெரிவித்தார்.இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால்  இன்று(1) காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவைப் படகுகளை எமது இலங்கை கடற்படையினர் பிடிக்காது ஏனோ தானோ என்று பிரச்சனைகளை விட்டுவிட்டு இருக்கின்றார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை நாம் இந்தியன் இழுவைப் படகுகளை கைது செய்கின்றோம் என்று கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் கைது செய்யப்பட்டதாக எமக்கு தெரியவில்லை.  அவர்கள் கைது செய்கின்றார்கள் தான் தமது எல்லைகளை விட்டு வெளியே செல்லும் போது  கச்சதீவிற்கு அண்மையில்  வைத்து கைது செய்கின்றார்கள். ஆனால் அங்கு வைத்து கைது செய்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை நேற்று முன்தினம் கூட எமது தொழிலாளர்களின்  2 லட்சம் பெறுமதியான திருக்கை வலைகளை அழித்து சேதப்படுத்தியுள்ளனர். கௌரவ கடற்தொழில் அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பதாகவும் கிட்டத்தட்ட சங்கப்பணியில் ஈடுபட்டு எட்டு வருடங்கள் ஆகியுள்ளதாகவும் எட்டு வருடங்களாக தாங்கள் பிரச்சனைகளை முன் வைத்து வருவதாகவும் தமக்கு எந்த விதமான தீர்வும் கிடைக்கப்படவில்லை.எனவே உடனடியாக கடற்தொழில் அமைச்சராக இருந்தாலும் சரி கௌரவ ஜனாதிபதியாக இருந்தாலும் சரி உடனடியாக இந்தியாவிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி எமக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.எமது பிரதேசத்திலே அதாவது எமது இலங்கைத்தீவிலே கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை இடம்பெற்று வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் போதைப்பொருட்கள் தான் அந்த போதைப்பொருட்கள் விற்பனையாவதற்கு காரணம் பெரும்பாலும் இந்தியன் இழுவைப்படகுகளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் இழுவை மடித்தொழில் செய்வதற்காக அவர்கள் இங்கு வருகின்றார்கள் என்றே கூறுகின்றார்கள் ஆனால் இந்தியன் இழுவைமடி படகு தான் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை எமது இழுவைப்படகுகளிற்கு விற்பனை செய்கின்றார்கள். அந்த வகையில் அனைத்து இழுவைப்படகுகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் எங்களுக்கான தீர்வினையும் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement