• May 18 2024

கச்சதீவை இந்தியாவிற்கு விட்டுக்கொடுக்காமல் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும்...! நற்குணம் வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Sep 1st 2023, 4:34 pm
image

Advertisement

வடமராட்சி பகுதியில் மிக அண்மைய தூரத்திற்கு  ரோலர் படகுகள் வந்து எதிர்பாராத விதமாக மீனவர்களின் வலைகளை நாசம் செய்துள்ளதாக கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினரான செல்லத்துரை நற்குணம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால்  இன்று(1) காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நயினாதீவு கடற்பகுதிக்கும் சென்று தீவக பகுதி மக்களின் வலைகளையும் இந்திய இழுவைப் படகு நாசம் செய்த்துள்ளதாகவும் இவ்வாறான எல்லை தாண்டிய செயற்பாடுகளை அனுமதியில்லாமல் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய இழுவை படகுகள் 300 மீட்டருக்கு அண்மையான தூரத்திற்கு வந்து தொழிலில் ஈடுபடுவதன் மூலம் சிறு தொழிலாளர்களின் தொழிலை நாசமாக்குகின்ற செயற்பாடுகளில் இந்திய மீனவர்கள் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எங்களுடைய மீனவர்களின் தொழில் உபகரணங்கள் நாசமாக்கப்படுவதால் அவர்களின் குடும்பங்கள் பாரிய கஸ்ரத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கச்சதீவு பிரதேசத்தை இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்தியாவிற்கு விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கச்சதீவை இந்தியாவிற்கு விட்டுக்கொடுக்காமல் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும். நற்குணம் வேண்டுகோள்.samugammedia வடமராட்சி பகுதியில் மிக அண்மைய தூரத்திற்கு  ரோலர் படகுகள் வந்து எதிர்பாராத விதமாக மீனவர்களின் வலைகளை நாசம் செய்துள்ளதாக கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினரான செல்லத்துரை நற்குணம் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால்  இன்று(1) காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நயினாதீவு கடற்பகுதிக்கும் சென்று தீவக பகுதி மக்களின் வலைகளையும் இந்திய இழுவைப் படகு நாசம் செய்த்துள்ளதாகவும் இவ்வாறான எல்லை தாண்டிய செயற்பாடுகளை அனுமதியில்லாமல் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்திய இழுவை படகுகள் 300 மீட்டருக்கு அண்மையான தூரத்திற்கு வந்து தொழிலில் ஈடுபடுவதன் மூலம் சிறு தொழிலாளர்களின் தொழிலை நாசமாக்குகின்ற செயற்பாடுகளில் இந்திய மீனவர்கள் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எங்களுடைய மீனவர்களின் தொழில் உபகரணங்கள் நாசமாக்கப்படுவதால் அவர்களின் குடும்பங்கள் பாரிய கஸ்ரத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை கச்சதீவு பிரதேசத்தை இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்தியாவிற்கு விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement