• Oct 01 2024

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் - இலங்கையருக்கு ஏற்பட்ட துயரம்

Chithra / Sep 30th 2024, 8:12 am
image

Advertisement


லெபனான் தலைநகர் மீது கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

40 வயது இலங்கையர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உயிருக்கு ஆபத்தில்லை என  பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளன.

லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் கபில ஜெயவீரவின் கூற்றுப்படி, கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உயிரைப் பறித்த இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலில் இலங்கையர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த இலங்கையர் பெய்ரூட்டில் உள்ள ரஃபிக் ஹரிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்டவர் தெற்கு களுத்துறையைச் சேர்ந்த மொஹமட் ராசிக் எனவும் அவர்  ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தூதுவர் ஜயவீர தெரிவித்தார்.

லெபனானில் உள்ள தூதரகத்தில் கிட்டத்தட்ட 7,600 இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆபத்தில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை ஒருங்கிணைத்து வருவதாக தூதுவர் ஜெயவீர வலியுறுத்தினார்.

லெபனானில் உள்ள இலங்கை பிரஜைகள் தங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் - இலங்கையருக்கு ஏற்பட்ட துயரம் லெபனான் தலைநகர் மீது கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.40 வயது இலங்கையர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உயிருக்கு ஆபத்தில்லை என  பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளன.லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் கபில ஜெயவீரவின் கூற்றுப்படி, கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உயிரைப் பறித்த இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலில் இலங்கையர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த இலங்கையர் பெய்ரூட்டில் உள்ள ரஃபிக் ஹரிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பாதிக்கப்பட்டவர் தெற்கு களுத்துறையைச் சேர்ந்த மொஹமட் ராசிக் எனவும் அவர்  ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தூதுவர் ஜயவீர தெரிவித்தார்.லெபனானில் உள்ள தூதரகத்தில் கிட்டத்தட்ட 7,600 இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆபத்தில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை ஒருங்கிணைத்து வருவதாக தூதுவர் ஜெயவீர வலியுறுத்தினார்.லெபனானில் உள்ள இலங்கை பிரஜைகள் தங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

Advertisement

Advertisement

Advertisement