• May 18 2024

இஸ்ரேல் பிரதமருக்கு தொடரும் தலைவலி – உலக நாடுகள் கடும் எதிர்ப்பு..! samugammedia

Tamil nila / Nov 13th 2023, 6:53 am
image

Advertisement

காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் கடுமையாக தாக்குதல் மற்றும் போரை நிறுத்த சர்வதேசளவில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிற கோரிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது.

கிட்ட தட்ட ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

குறிப்பாக இதில் 4000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேலிடம் போர் நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

 இது இஸ்ரேலின் எதிர்காலத்திற்கும் நல்லத்தில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை 57 இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் சௌதி அரேபியாவில் சந்தித்து, போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே லண்டனில் 3 இலட்சம் பாலஸ்தீன ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போர் நிறுத்தம் கோரி பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

அத்துடன், பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் இந்த பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இது தொடர்பில் தெரிவிக்கையில், ஹமாஸ், பிணைக்கைதிகள் 240 பேரையும் விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா சார்பில் முன்மொழியப்பட்ட நாள்தோறும் நான்கு மணி நேர போர் இடைவெளி நேரத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டாலும் தாக்குதல் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இஸ்ரேல் பிரதமருக்கு தொடரும் தலைவலி – உலக நாடுகள் கடும் எதிர்ப்பு. samugammedia காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் கடுமையாக தாக்குதல் மற்றும் போரை நிறுத்த சர்வதேசளவில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிற கோரிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது.கிட்ட தட்ட ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.குறிப்பாக இதில் 4000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேலிடம் போர் நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்தார். இது இஸ்ரேலின் எதிர்காலத்திற்கும் நல்லத்தில்லை எனவும் தெரிவித்திருந்தார்.இதேவேளை 57 இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் சௌதி அரேபியாவில் சந்தித்து, போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.இதனிடையே லண்டனில் 3 இலட்சம் பாலஸ்தீன ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போர் நிறுத்தம் கோரி பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.அத்துடன், பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் இந்த பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இது தொடர்பில் தெரிவிக்கையில், ஹமாஸ், பிணைக்கைதிகள் 240 பேரையும் விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.மேலும் அமெரிக்கா சார்பில் முன்மொழியப்பட்ட நாள்தோறும் நான்கு மணி நேர போர் இடைவெளி நேரத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டாலும் தாக்குதல் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement