• May 19 2024

கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம் ! samugammedia

Tamil nila / Sep 25th 2023, 8:18 pm
image

Advertisement

கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தற்போதுள்ள அமைப்புக்குப் பதிலாக புதிய அமைப்பை நிறுவும் நடவடிக்கை தற்போது முடிவடைந்துள்ளது.

இதனால், 2023.10.03 ஆம் திகதி முதல் புதிய அமைப்பை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பிக்கவுள்ளதால், வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்குவது 26ஆம் திகதி மாலை 7.00 மணிக்குப் பின்னர் 27 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் ஐ.எம்.றிக்காஸ் தெரிவித்தார். 

இதன் படி, எதிர்வரும்  26ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை அபராதம் செலுத்தாமல் புதுப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இணையத்தளம் மூலம் (Online) வாகன வருமான உத்தரவுப் பத்திரம் பெறுவது, செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம் samugammedia கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தற்போதுள்ள அமைப்புக்குப் பதிலாக புதிய அமைப்பை நிறுவும் நடவடிக்கை தற்போது முடிவடைந்துள்ளது.இதனால், 2023.10.03 ஆம் திகதி முதல் புதிய அமைப்பை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பிக்கவுள்ளதால், வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்குவது 26ஆம் திகதி மாலை 7.00 மணிக்குப் பின்னர் 27 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் ஐ.எம்.றிக்காஸ் தெரிவித்தார். இதன் படி, எதிர்வரும்  26ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை அபராதம் செலுத்தாமல் புதுப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.இணையத்தளம் மூலம் (Online) வாகன வருமான உத்தரவுப் பத்திரம் பெறுவது, செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement