• May 18 2024

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும் - த. தே. கூட்டமைப்பிடம் வேண்டுகோள்!.

Tamil nila / Dec 24th 2022, 12:35 pm
image

Advertisement

இலங்கையில் தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும் என ஐக்கிய அமெரிக்க தமிழ் செயல் குழு த. தே.கூட்டமைபிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளது.


இலங்கையில் தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் புலம்பெயர்ந்த அமெரிக்க தமிழ் மக்களாகிய நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழ் தேசிய பிரச்சினை குறித்த எமது நிலைப்பாட்டை அதிக பட்சமாக பரிசீலிக்குமாறு மிக அவசரமாக உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். என ஐக்கிய அமெரிக் தமிழ் செயல் குழுவின் (United States Tamil Action Group (USTAG) தலைவர் அனன் பொன்னன்பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களிடம் எழுத்துமூலம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.


 ஐக்கிய அமெரிக் தமிழ் செயல் குழுவின் (United States Tamil Action Group (USTAG) இஸ்தாபக உறுப்பினரும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான லவன் முத்து அக்கடித்தை த. தே. கூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களிடம் வெள்ளிக்கிழமை(23) கையளித்தார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…


எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 75 ஆண்டுகளில் எத்தகைய நிபந்தனையும் இல்லாமல் இலங்கை அரசு தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை கருத்தில் கொண்டு, அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் என்பன இலங்கை அரசாங்கத்துடனான எந்தவொரு பேச்சுவார்த்தையின் போதும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எங்களுடன் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.


இலங்கை அரசாங்கத்துடனான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழ் சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும். தமிழ் புலம்பெயர்ந்தோர் போரின் காரணமாக உருவானார்கள், அவர்களுக்குத் தமது தாய் நாட்டுக்குத் திரும்புவதற்கான உரிமை உள்ளது. எனவே, மோதலின் பின்னரான இறுதித் (அரசியல்) தீர்வில் புலம்பெயர்ந்தோர் சட்டப்பூர்வமான பங்குதாரராக உள்ளனர்.


 பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும், P2P ஒருங்கிணைப்பாளர்கள், சமயத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் சம்மேளனங்களின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட தமிழ் சிவில் சமூகத்தை கலந்தாலோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் கலந்துரையாடலின் நிலை மற்றும் உள்ளடக்கத்தைப் பொறுத்து சிவில் சமூகம், புலம்பெயர்ந்தோர் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கு முன்னர், கடந்த 75 ஆண்டுகளில் அதன் உடைந்த வாக்குறுதிகள் மற்றும் துரோகங்களைக் கருத்தில் கொண்டு, தமிழ் மக்களுடன் இலங்கை அரசு தனது "நம்பிக்கையை" நிறுவ வேண்டும். அரசியல் கைதிகளை விடுவித்தல், இராணுவ மயமாக்கல் மூலம் வடக்கு-கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டை அகற்றுதல், நில அபகரிப்புகளை உடனடியாக நிறுத்துதல், போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுதல் போன்ற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் இதில் அடங்கும் நல்லெண்ணத்தின் சைகைகள் ஆகும்.


அதேநேரம், இலங்கை அரசாங்கத்துடன் மேலும் சந்திப்பதற்கு முன்னர், பரந்த ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்புகளிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். இது ஒரு “கூட்டாட்சி" தீர்வாக இருந்தால், அதன் செயல்பாட்டு விவரங்கள் மற்றும் செயல்பாட்டு பண்புகளை தமிழர்கள் மத்தியில் இருந்து முழுமையாக உருவாக்க வேண்டும், இதனால் அவர்கள் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒருமித்த முன்மொழிவை முன்வைக்க முடியும்.


கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாகவும், தலைவராகவும் இருந்து, மேற்கூறியவற்றை நீங்கள் உறுதி செய்வீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், இதையே நீங்களும் மற்றும் பிற தமிழ் நாடாளுமன்ற மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளும் இலங்கை அரச தரப்பைச் சந்திக்கும் போது அதிகபட்சமாக பரிசீலிப்பீர்கள் என நம்புகின்றோம்.


தற்போதைய பொருளாதாரச் சரிவு மற்றும் பிணை எடுப்புக்காக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இலங்கையின் மொத்த சார்பு நிலையும் நாம் பிறந்த நாட்டில் இழந்த உரிமைகளை மீளப் பெறுவதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பத்தை முன்வைக்கிறது. எமது மக்களுக்கு அவ்வாறானதொரு முடிவு கிடைக்காமல் இந்த சந்தர்ப்பத்தை நாம் அனுமதிக்க முடியாது. 


நீங்கள் சாதிப்பீர்கள் என்று நாங்கள் நம்பும் இந்த முயற்சிக்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளாகிய எங்கள் மேலான ஆதரவை வழங்க உறுதி பூண்டுள்ளோம். என அதில் மிகவும் உருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககதாகும்.


USTAG அமைப்பானது 2009 இறுதி யுத்த நேரம் இருந்து தமிழர் நலன் கருதி பல முன் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது மா மனிதர் ஜெயராம் அவர்களின் ஆலோசனையின் கீழ் உருவான இந்த அமைப்பின் செயலாளராக தமிழ் நாட்டை சேர்ந்த சுந்தர் குப்புசாமி செயல்படுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்


அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும் - த. தே. கூட்டமைப்பிடம் வேண்டுகோள். இலங்கையில் தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும் என ஐக்கிய அமெரிக்க தமிழ் செயல் குழு த. தே.கூட்டமைபிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளது.இலங்கையில் தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் புலம்பெயர்ந்த அமெரிக்க தமிழ் மக்களாகிய நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழ் தேசிய பிரச்சினை குறித்த எமது நிலைப்பாட்டை அதிக பட்சமாக பரிசீலிக்குமாறு மிக அவசரமாக உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். என ஐக்கிய அமெரிக் தமிழ் செயல் குழுவின் (United States Tamil Action Group (USTAG) தலைவர் அனன் பொன்னன்பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களிடம் எழுத்துமூலம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். ஐக்கிய அமெரிக் தமிழ் செயல் குழுவின் (United States Tamil Action Group (USTAG) இஸ்தாபக உறுப்பினரும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான லவன் முத்து அக்கடித்தை த. தே. கூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களிடம் வெள்ளிக்கிழமை(23) கையளித்தார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 75 ஆண்டுகளில் எத்தகைய நிபந்தனையும் இல்லாமல் இலங்கை அரசு தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை கருத்தில் கொண்டு, அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் என்பன இலங்கை அரசாங்கத்துடனான எந்தவொரு பேச்சுவார்த்தையின் போதும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எங்களுடன் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.இலங்கை அரசாங்கத்துடனான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழ் சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும். தமிழ் புலம்பெயர்ந்தோர் போரின் காரணமாக உருவானார்கள், அவர்களுக்குத் தமது தாய் நாட்டுக்குத் திரும்புவதற்கான உரிமை உள்ளது. எனவே, மோதலின் பின்னரான இறுதித் (அரசியல்) தீர்வில் புலம்பெயர்ந்தோர் சட்டப்பூர்வமான பங்குதாரராக உள்ளனர். பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும், P2P ஒருங்கிணைப்பாளர்கள், சமயத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் சம்மேளனங்களின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட தமிழ் சிவில் சமூகத்தை கலந்தாலோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.மேலும் கலந்துரையாடலின் நிலை மற்றும் உள்ளடக்கத்தைப் பொறுத்து சிவில் சமூகம், புலம்பெயர்ந்தோர் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கு முன்னர், கடந்த 75 ஆண்டுகளில் அதன் உடைந்த வாக்குறுதிகள் மற்றும் துரோகங்களைக் கருத்தில் கொண்டு, தமிழ் மக்களுடன் இலங்கை அரசு தனது "நம்பிக்கையை" நிறுவ வேண்டும். அரசியல் கைதிகளை விடுவித்தல், இராணுவ மயமாக்கல் மூலம் வடக்கு-கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டை அகற்றுதல், நில அபகரிப்புகளை உடனடியாக நிறுத்துதல், போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுதல் போன்ற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் இதில் அடங்கும் நல்லெண்ணத்தின் சைகைகள் ஆகும்.அதேநேரம், இலங்கை அரசாங்கத்துடன் மேலும் சந்திப்பதற்கு முன்னர், பரந்த ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்புகளிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். இது ஒரு “கூட்டாட்சி" தீர்வாக இருந்தால், அதன் செயல்பாட்டு விவரங்கள் மற்றும் செயல்பாட்டு பண்புகளை தமிழர்கள் மத்தியில் இருந்து முழுமையாக உருவாக்க வேண்டும், இதனால் அவர்கள் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒருமித்த முன்மொழிவை முன்வைக்க முடியும்.கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாகவும், தலைவராகவும் இருந்து, மேற்கூறியவற்றை நீங்கள் உறுதி செய்வீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், இதையே நீங்களும் மற்றும் பிற தமிழ் நாடாளுமன்ற மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளும் இலங்கை அரச தரப்பைச் சந்திக்கும் போது அதிகபட்சமாக பரிசீலிப்பீர்கள் என நம்புகின்றோம்.தற்போதைய பொருளாதாரச் சரிவு மற்றும் பிணை எடுப்புக்காக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இலங்கையின் மொத்த சார்பு நிலையும் நாம் பிறந்த நாட்டில் இழந்த உரிமைகளை மீளப் பெறுவதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பத்தை முன்வைக்கிறது. எமது மக்களுக்கு அவ்வாறானதொரு முடிவு கிடைக்காமல் இந்த சந்தர்ப்பத்தை நாம் அனுமதிக்க முடியாது. நீங்கள் சாதிப்பீர்கள் என்று நாங்கள் நம்பும் இந்த முயற்சிக்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளாகிய எங்கள் மேலான ஆதரவை வழங்க உறுதி பூண்டுள்ளோம். என அதில் மிகவும் உருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககதாகும்.USTAG அமைப்பானது 2009 இறுதி யுத்த நேரம் இருந்து தமிழர் நலன் கருதி பல முன் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது மா மனிதர் ஜெயராம் அவர்களின் ஆலோசனையின் கீழ் உருவான இந்த அமைப்பின் செயலாளராக தமிழ் நாட்டை சேர்ந்த சுந்தர் குப்புசாமி செயல்படுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்

Advertisement

Advertisement

Advertisement