• May 05 2025

இனி இதற்கு தடை; மீறினால் சட்ட நடவடிக்கை! தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

Chithra / May 4th 2025, 8:59 am
image


தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வௌியிட்டுள்ளது. 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

அத்துடன் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலோ வாக்குச் சாவடிகள் மட்டத்திலோ திறந்துள்ள அலுவலகங்களிலும் 60 அடி கொண்ட பேனர் தவிர்த்து வேறு எந்த அலங்காரம், போஸ்டர்களும் காட்சிப்படுத்த முடியாது.

அதேபோன்று தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் பயணிக்கும் வாகனங்களில் போஸ்டர்களை காட்சிப்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறும் எந்தவொரு அபேட்சகர் அல்லது ஆதரவாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கெடுப்பு நிலையத்தில்  வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பிற்பகல் 04.00 மணிக்கு பின்னர் ஊடகங்களில் வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தால் அதனை பிற்பகல் 04.00 மணிக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.


இனி இதற்கு தடை; மீறினால் சட்ட நடவடிக்கை தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வௌியிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.அத்துடன் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலோ வாக்குச் சாவடிகள் மட்டத்திலோ திறந்துள்ள அலுவலகங்களிலும் 60 அடி கொண்ட பேனர் தவிர்த்து வேறு எந்த அலங்காரம், போஸ்டர்களும் காட்சிப்படுத்த முடியாது.அதேபோன்று தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் பயணிக்கும் வாகனங்களில் போஸ்டர்களை காட்சிப்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறும் எந்தவொரு அபேட்சகர் அல்லது ஆதரவாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கெடுப்பு நிலையத்தில்  வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பிற்பகல் 04.00 மணிக்கு பின்னர் ஊடகங்களில் வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அரசியல்வாதிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தால் அதனை பிற்பகல் 04.00 மணிக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement