ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்புக்கு போவதும் நாம் பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றுதான் என பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நேற்று முன்தினம் (9) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது வேட்பாளன் விடயத்தை நான் ஆதரிக்கவில்லை. உலகில் இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்புகள் உள்ளன.
ஸ்பெயினில் நடந்த வாக்கெடுப்பைக் கூறலாம். ஐனாதிபதி தேர்தலி்ல் சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் இரண்டில் ஒரு முடிவில் இருப்பார்கள்.
ஜனாதிபதித் தேர்தலுக்கும் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக எமது கருத்துக்களை அரசாங்கத்திற்கு கூறமுடியாது. பல உதாரணங்கள் உள்ளன. ஒஸ்லோ மாநாட்டிலும் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்கப்பட்டது.
புதிய அரசியல் யாப்பினை மாற்றியமைக்கும் குழுவில் இருந்தோம் அதில் தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்க மாட்டார்கள் என்று கூறினேன்.
அரசியல் அமைப்பாக வேறு மதம் வேறு இதனை பெளத்தத்திற்கு முதலிடம் கொடுப்பது தவறு எனக்கூறினேன்.
தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த உடன்படவில்லை எமது எதிர்பைக் காட்டும் வகையிலான வாக்கினை எடுக்க வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் வடக்கு கிழக்கில் உள்ள மொத்த வாக்குகளில் கணிசமான வாக்கினைப் பெறுபவராக இருக்க வேண்டும்.
நாம் இப்போது 6 கட்சிகளாக பிரிந்து உள்ளோம்.
மலையக மக்களை நாம் இணைக்கவில்லை அவர்களின் பிரச்சனைகள் வேறு எமது பிரச்சனைகள் வேறு கிழக்கு மாகாணத்திலுள்ள பல அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை விரும்பவில்லை
பொது வேட்பாளர் மேலும் கட்சிகள் பிரிவடையும். 2024 இல் பொது வேட்பாளரை நிறுத்தினால் 2029 இலும் நிறுத்த போகிறோமா என்பதும் முக்கியமான கேள்வியாகும்.
ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்புக்கு போவதும் நாம் பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றுதான் - என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்புக்கு போவதும் நாம் பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்று தான் - அருளானந்தம் சர்வேஸ்வரன் தெரிவிப்பு. ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்புக்கு போவதும் நாம் பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றுதான் என பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நேற்று முன்தினம் (9) முன்னெடுக்கப்பட்டது.இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொது வேட்பாளன் விடயத்தை நான் ஆதரிக்கவில்லை. உலகில் இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்புகள் உள்ளன.ஸ்பெயினில் நடந்த வாக்கெடுப்பைக் கூறலாம். ஐனாதிபதி தேர்தலி்ல் சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் இரண்டில் ஒரு முடிவில் இருப்பார்கள்.ஜனாதிபதித் தேர்தலுக்கும் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது.ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக எமது கருத்துக்களை அரசாங்கத்திற்கு கூறமுடியாது. பல உதாரணங்கள் உள்ளன. ஒஸ்லோ மாநாட்டிலும் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்கப்பட்டது.புதிய அரசியல் யாப்பினை மாற்றியமைக்கும் குழுவில் இருந்தோம் அதில் தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்க மாட்டார்கள் என்று கூறினேன்.அரசியல் அமைப்பாக வேறு மதம் வேறு இதனை பெளத்தத்திற்கு முதலிடம் கொடுப்பது தவறு எனக்கூறினேன்.தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த உடன்படவில்லை எமது எதிர்பைக் காட்டும் வகையிலான வாக்கினை எடுக்க வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் வடக்கு கிழக்கில் உள்ள மொத்த வாக்குகளில் கணிசமான வாக்கினைப் பெறுபவராக இருக்க வேண்டும்.நாம் இப்போது 6 கட்சிகளாக பிரிந்து உள்ளோம். மலையக மக்களை நாம் இணைக்கவில்லை அவர்களின் பிரச்சனைகள் வேறு எமது பிரச்சனைகள் வேறு கிழக்கு மாகாணத்திலுள்ள பல அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை விரும்பவில்லைபொது வேட்பாளர் மேலும் கட்சிகள் பிரிவடையும். 2024 இல் பொது வேட்பாளரை நிறுத்தினால் 2029 இலும் நிறுத்த போகிறோமா என்பதும் முக்கியமான கேள்வியாகும்.ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்புக்கு போவதும் நாம் பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றுதான் - என அவர் தெரிவித்துள்ளார்.