• May 02 2025

யாழில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம்

Chithra / May 1st 2025, 3:37 pm
image

 

தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இந்த மேதினக் கூட்டம் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இக் கூட்டம் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் முக்கியஸ்தர்களின் உரையுடன் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நிறைவடைந்தது.

இக் கூட்டத்தில கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி வேட்பாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


யாழில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம்  தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இந்த மேதினக் கூட்டம் இடம்பெற்றது.மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இக் கூட்டம் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் முக்கியஸ்தர்களின் உரையுடன் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நிறைவடைந்தது.இக் கூட்டத்தில கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி வேட்பாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement