• May 19 2024

வடக்கில் பெய்துவரும் கன மழை..! பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை..? விடுக்கப்பட்ட கோரிக்கை samugammedia

Chithra / Nov 15th 2023, 5:30 pm
image

Advertisement

 

வடக்கில் பெய்துவரும் அதிக மழை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதிவரை இந்நிலை தொடருமென்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் விடுமுறை வழங்கப்பட்டமை குறித்து வடமாகாண ஆளுநரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் சிரமப்படுவதுடன் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக கூறியுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று (15) காலை 8.30 மணி வரையான மழைவீழ்ச்சி பதிவை அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சுவேலியில் 175.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறையில் 170.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 139.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் மீசாலையில் 133 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் தொல்புரத்தில் 118 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகி உள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் மத்தியில் 68.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் கோட்டை பகுதியில் 58.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் சாவகச்சேரியில் 34.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் அம்பனில் 24.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நயினாதீவில் 6.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நெடுந்தீவில் 2.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மேலும் கிளிநொச்சியில் 99.9 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் ஆனையிறவில் 56.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் அக்கராயனில் 128.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.


வடக்கில் பெய்துவரும் கன மழை. பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை. விடுக்கப்பட்ட கோரிக்கை samugammedia  வடக்கில் பெய்துவரும் அதிக மழை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் வலியுறுத்தியுள்ளார்.எதிர்வரும் 18ஆம் திகதிவரை இந்நிலை தொடருமென்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் விடுமுறை வழங்கப்பட்டமை குறித்து வடமாகாண ஆளுநரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் சிரமப்படுவதுடன் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக கூறியுள்ளார்.இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று (15) காலை 8.30 மணி வரையான மழைவீழ்ச்சி பதிவை அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சுவேலியில் 175.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறையில் 170.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 139.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் மீசாலையில் 133 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் தொல்புரத்தில் 118 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகி உள்ளது.அத்துடன் யாழ்ப்பாணம் மத்தியில் 68.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் கோட்டை பகுதியில் 58.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் சாவகச்சேரியில் 34.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் அம்பனில் 24.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நயினாதீவில் 6.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நெடுந்தீவில் 2.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.மேலும் கிளிநொச்சியில் 99.9 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் ஆனையிறவில் 56.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் அக்கராயனில் 128.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement