• May 03 2024

இன்றிரவு மழை; 5 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை! SamugamMedia

Chithra / Feb 25th 2023, 6:39 pm
image

Advertisement

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதுவிர, கொழும்பு முதல் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இன்றிரவு மழை; 5 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை SamugamMedia மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இதுவிர, கொழும்பு முதல் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement