• May 02 2024

போதைக்கு அடிமையானோர் ஹெரோயினுக்கு பதிலாக மனஅழுத்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு...!

Sharmi / Apr 19th 2024, 10:54 am
image

Advertisement

ஹெய்ரோய்ன் கடத்தல் அண்மைக்காலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் அது கிடைக்காமையால் மன ழுத்தத்துக்குப் பயன்படுத்தும் மாத்திரைகளை பதில் பொருளாகப் பதிலாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம்(18)  இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் வெளிவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடளாவிய ரீதியில் தற்போது 'யுக்திய’ சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் ஹெரோய்ன் பாவனை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு ஹெரோய்ன் சடுதியாகக் கடத்தப்படுவது மிகையாகவே குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் பதில் பொருளாக மனவழுத்தத்துக்குப்பயன்படுத்தும் மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றனர்.

மன ழுத்தத்துக்கு பயன்படுத்தும் மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்படும் அளவுக்கு மருத்துவக் காரணங்களுக்கு அப்பாற்பட்ட அதன் பாவனை அதிகரித்துள்ளதாகவும்  ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைக்கு அடிமையானோர் ஹெரோயினுக்கு பதிலாக மனஅழுத்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு. ஹெய்ரோய்ன் கடத்தல் அண்மைக்காலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் அது கிடைக்காமையால் மன அழுத்தத்துக்குப் பயன்படுத்தும் மாத்திரைகளை பதில் பொருளாகப் பதிலாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளதுயாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம்(18)  இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் வெளிவந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடளாவிய ரீதியில் தற்போது 'யுக்திய’ சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஹெரோய்ன் பாவனை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு ஹெரோய்ன் சடுதியாகக் கடத்தப்படுவது மிகையாகவே குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் பதில் பொருளாக மனவழுத்தத்துக்குப்பயன்படுத்தும் மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றனர்.மன அழுத்தத்துக்கு பயன்படுத்தும் மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்படும் அளவுக்கு மருத்துவக் காரணங்களுக்கு அப்பாற்பட்ட அதன் பாவனை அதிகரித்துள்ளதாகவும்  ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement