• Nov 17 2024

யாழ்.மாவட்ட மீனவர் சம்மேளன தலைவர்கள்- இந்தியத் துணைத் தூதர் சந்திப்பு...!

Sharmi / Jun 18th 2024, 8:52 pm
image

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும் யாழ்.இந்தியத் துணைத் தூதர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு யாழில் இன்று(18)  இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில், யாழ்.மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் எஸ்.புனிதபிரகாஷ், யாழ்.மாவட்ட மீனவர் சங்கத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட கிராமிய மீனவர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான செல்லதுரை நற்குணம், யாழ் மாவட்ட கிராமிய மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் அன்ரன் செல்வராசா, செல்வராசா சிவஞானராஜா, யாழ்.மாவட்ட மீனவர் சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கிராமிய மீனவர் சம்மேளனம் ஆகிய இரண்டினதும் பொருளாளர், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரத்னகுமார், மற்றும் மீனவர் சங்க உறுப்பினர் குணரத்தினம் குணராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வடமாகாண மீனவர்கள் சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் போது இந்திய அரசு வழங்கிய ஆதரவிற்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். 

அதேவேளை, வட மாகாணத்தில்(NP) மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பில்  துணைத் தூதரகத்திடம் முறையிட்டனர்.

அதேவேளை இலங்கை மீனவர்களின்  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியத் துணைத் தூதர் எடுத்துரைத்ததுடன்,  மீனவர் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார். 






யாழ்.மாவட்ட மீனவர் சம்மேளன தலைவர்கள்- இந்தியத் துணைத் தூதர் சந்திப்பு. யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும் யாழ்.இந்தியத் துணைத் தூதர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு யாழில் இன்று(18)  இடம்பெற்றது.குறித்த சந்திப்பில், யாழ்.மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் எஸ்.புனிதபிரகாஷ், யாழ்.மாவட்ட மீனவர் சங்கத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட கிராமிய மீனவர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான செல்லதுரை நற்குணம், யாழ் மாவட்ட கிராமிய மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் அன்ரன் செல்வராசா, செல்வராசா சிவஞானராஜா, யாழ்.மாவட்ட மீனவர் சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கிராமிய மீனவர் சம்மேளனம் ஆகிய இரண்டினதும் பொருளாளர், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரத்னகுமார், மற்றும் மீனவர் சங்க உறுப்பினர் குணரத்தினம் குணராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதன்போது, வடமாகாண மீனவர்கள் சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் போது இந்திய அரசு வழங்கிய ஆதரவிற்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். அதேவேளை, வட மாகாணத்தில்(NP) மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பில்  துணைத் தூதரகத்திடம் முறையிட்டனர்.அதேவேளை இலங்கை மீனவர்களின்  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியத் துணைத் தூதர் எடுத்துரைத்ததுடன்,  மீனவர் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார். 

Advertisement

Advertisement

Advertisement