• Jul 27 2024

தியாக தீபம் திலீபனின் தியாகத்தை இளையோருக்கு கடத்தும் அதிரடி முயற்சியில் இறங்கிய யாழ். பல்கலை மாணவர்கள்...!யாழில் இன்று ஆரம்பித்து வைத்தனர்...!samugammedia

Sharmi / Sep 20th 2023, 1:20 pm
image

Advertisement

தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, திலீபனின் தியாக வரலாற்றை சொல்லும் துண்டுப் பிரசுரங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தை  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(20) யாழ்ப்பாணத்தில் அதிரடியாக ஆரம்பித்துள்ளனர்.



தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தற்போது தமிழர் தாயகமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் திலீபனின் வாழ்க்கைப் பயணம் மற்றும் விடுதலை உணர்வு அத்துடன் திலீபனின் உண்ணாவிரத போராட்ட நினைவுகள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஆரம்பகட்டமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பொதுமக்களுக்கு இன்று யாழ் பேருந்துநிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிலையில் துண்டுபிரசுரம் வழங்கும் செயற்பாட்டின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அ. விஜயகுமார்,

இன்றைய தினம் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றோம். அந்த வகையில் எங்களுடைய மக்களுக்கு தியாகதீபம் திலீபன் அவர்களுடைய தியாகங்களை எடுத்துரைக்கவுள்ளோம்.

மேலும், எங்களுடைய மக்கள் எங்களுடன் இணைந்து இன விடுதலைக்கு பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

எனவே தியாகதீபம் திலீபனுடைய துண்டுப்பிரசுரங்கள் வழங்கி எதிர்கால சந்ததியினருக்கு எங்களுடைய இனம் இன்னும் விடுதலையாகவில்லை எங்களுடைய இனம் மேலும் விடுதலை அடைய வேண்டும் எனவும் இதற்கான போராட்டத்தை வேறு வழியில் கொண்டு சென்று எங்களுடைய இனத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திலீபன் எனும் பெயர் வரலாற்று வினைச் சொல்

உலகிற்கே அகிம்சையை போதித்ததே நாங்கள் தான் என்று கூவிக் கொண்டு தமிழர் தாயகத்தில் அடாவடியில் ஈடுபட்ட இந்தியம் அதன் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தம்முயிர் நீத்த தியாகதீபங்கள் அன்னை பூபதி மற்றும் அண்ணன் திலீபன் முன்னால் வெட்கி நாணமிளந்து நிற்கின்றது.

இந்திய ஒன்றிய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக அமைதிப்படையென்ற போர்வையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இந்திய ராணுவம் நிலைகொண்ட காலம் அது. தமிழர் தாயகத்தில் அமைதியை ஏற்படுத்தப் போகிறோம் என்று தாயகத்தினுள்ளே நுழைந்து தமிழரின் உரிமைப் போராட்டத்தை முடக்குவதிலும் தொடர்ச்சியான உயிர்க்கொலைகளிலும் ஆக்கிரமிப்பு அடாவடிகளிலும் ஈடுபட்டு வலிந்து போரை திணித்துக் கொண்டிருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிற்கு எதிராக உண்ணாநோன்பிருந்து தம்மையே ஆயுதமாக்கியவர் தான் அண்ணன் திலீபன் அவர்கள்.

போராளியாகிய மருத்துவ மாணவன்

தமிழர்களின் தன்னாட்சியுரிமைக்கான அறவழிப்போராட்டம் சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசால் ஆயுதமுனை கொண்டு அடக்கியொடுக்கப்பட்ட தருணத்தில், ஆயுத வழியே விடுதலைக்கான ஒரேவழியென எண்ணி இளமைக்கால கனவுகள் யாவற்றையும் தொலைத்து களம்புகுந்த தமிழ் இளம்தலைமுறைகளில் ஒருவன் தான் அண்ணன் திலீபன். மருத்துவ மாணவனாக தேர்வாகிய 1980 காலகட்டத்தில் பேரினவாதத்தின் கொடுமைகளை நேரில் கண்டு, போராடத் துணியாமல் இங்கு எதுவும் மாறப் போவதில்லை என்று முடிவெடுத்து போராளியானவர்.

அண்ணன் திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்

ஆயுதப்போராட்டம் தான் ஒரேவழியென எண்ணி விடுதலைக் களம்புகுந்த அண்ணன் திலீபன். தமிழர் தேசத்தில் அமைதிப்படையென்ற பெயரில் வலிந்து போரைத்திணித்துக் கொண்டிருந்த காந்தி தேசத்திற்கு அதன் மொழியில் சொன்னால் ஒரு வேளை புரியுமோ என்றெண்ணி 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா அறப்போரைத் தொடங்கினார்.

01. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும்.

02. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

03.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

04.ஊர்க்காவல்ப் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்பட்ட வேண்டும்.

05. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

என்னும் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் கூட அருந்தப் போவதில்லை என்று அறிவித்து தொடங்கப்பட்ட அண்ணனின் உண்ணா அறப்போர், காந்தி தேசத்தின் செவிகளை எட்டவும் இல்லை, சனநாயகத்தின் கதவுகளை தட்டவும் இல்லை.

உண்ணாவிரதம் தொடங்கப்பட்ட நான்கு நாட்களாக பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வாசித்த அண்ணனால் 5ஆம் நாளிலிருந்து எதையும் வாசிக்க முடியவில்லை, போர்வைக்குள்ளேயே புதைந்து கிடந்தார். தன்னை நோக்கி கதறி அழுதவர்களுக்கும், போராட்டத்தை கைவிடக்கோரி கேட்டுக் கொண்டவர்களுக்கும், தனது சிறு புன்னகையை பதிலாகக் கொடுத்து தான் இறுவரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் உறுதி கொண்டிருந்தார்.

"ஒ... மரணித்த வீரனே! உன் சீருடைகளை எனக்குத் தா! உன் பாதணிகளை எனக்கு தா! உன் ஆயுதங்களை எனக்கு தா!" எனும் அண்ணன் விரும்பிக் கேட்கும் பாடல் உண்ணாவிரதக் களத்திலே ஒலித்துக் கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மரணத்தை நெருக்கிக் கொண்டிருந்தது, காந்தி தேசம் அகிம்சைக்கு மதிப்பளித்து கோரிக்கைக்கு செவி கொடுக்கும் என நம்பியிருந்த தமிழர்களின் எண்ணம் தகரத் தொடங்கியது.

திலீபனின் எனும் காவியத்தின் இறுதி அத்தியாயம்

11ஆம் நாள் மாலை 4 மணியளவில் அண்ணன் முற்றிலுமாக சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று, சுவாசிக்கவே கடினப்பட்டுக் கொண்டிருந்தார. அன்றிரவு அண்ணனுக்குப் பிடித்த "ஓ மரணித்த வீரனே" பாடல் மீண்டும் ஒலிபரப்பப்ட்ட போது மக்கள் பெரும் அழுத்தத்தில் வெடித்து அழுதனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ஆம் நாள் நிறைவில் காலை 10.48 மணிக்கு அண்ணன் உயிர் பிரிந்தது. 265 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, உலகச் சமூகத்திற்கு சனநாயக. அகிம்சை வகுப்பெடுத்து தமிழர் தாயகத்திற்கு விடைகொடுத்துச் சென்றான் அந்த 23 வயதுப் போராளி.

காந்தி தேசமோ! சனாநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் உலக சமூகமோ! தமது கைகளை இறுக்கட்டி அண்ணன் திலீபனின் சாவை வேடிக்கை தான் பார்த்தன. செப்டெம்பர் 26 ஆம் திகதி, காந்தி தேசத்தின் நாட்களில் அதுவொரு அவமானம் நிறைந்த கறுப்பு நாள்!

நமக்கு, அறவழியில் போராடியவர்களைத் தெரியும்! ஆயுத வழியில்ப் போராடியவர்களைத் தெரியும்! ஆனால், ஆயுதம் ஏந்திய எம் தமிழ் இளைஞர்களிற்கு அறவழியிலும் போராடத்தெரியும் என்று காட்டிய தமிழ்ப் பெருமகன் எங்களின் அண்ணன் தியாகதீபம் திலீபன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



தியாக தீபம் திலீபனின் தியாகத்தை இளையோருக்கு கடத்தும் அதிரடி முயற்சியில் இறங்கிய யாழ். பல்கலை மாணவர்கள்.யாழில் இன்று ஆரம்பித்து வைத்தனர்.samugammedia தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, திலீபனின் தியாக வரலாற்றை சொல்லும் துண்டுப் பிரசுரங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தை  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(20) யாழ்ப்பாணத்தில் அதிரடியாக ஆரம்பித்துள்ளனர். தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தற்போது தமிழர் தாயகமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் திலீபனின் வாழ்க்கைப் பயணம் மற்றும் விடுதலை உணர்வு அத்துடன் திலீபனின் உண்ணாவிரத போராட்ட நினைவுகள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஆரம்பகட்டமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பொதுமக்களுக்கு இன்று யாழ் பேருந்துநிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.இந்நிலையில் துண்டுபிரசுரம் வழங்கும் செயற்பாட்டின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அ. விஜயகுமார்,இன்றைய தினம் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றோம். அந்த வகையில் எங்களுடைய மக்களுக்கு தியாகதீபம் திலீபன் அவர்களுடைய தியாகங்களை எடுத்துரைக்கவுள்ளோம்.மேலும், எங்களுடைய மக்கள் எங்களுடன் இணைந்து இன விடுதலைக்கு பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.எனவே தியாகதீபம் திலீபனுடைய துண்டுப்பிரசுரங்கள் வழங்கி எதிர்கால சந்ததியினருக்கு எங்களுடைய இனம் இன்னும் விடுதலையாகவில்லை எங்களுடைய இனம் மேலும் விடுதலை அடைய வேண்டும் எனவும் இதற்கான போராட்டத்தை வேறு வழியில் கொண்டு சென்று எங்களுடைய இனத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.அதேவேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,திலீபன் எனும் பெயர் வரலாற்று வினைச் சொல்உலகிற்கே அகிம்சையை போதித்ததே நாங்கள் தான் என்று கூவிக் கொண்டு தமிழர் தாயகத்தில் அடாவடியில் ஈடுபட்ட இந்தியம் அதன் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தம்முயிர் நீத்த தியாகதீபங்கள் அன்னை பூபதி மற்றும் அண்ணன் திலீபன் முன்னால் வெட்கி நாணமிளந்து நிற்கின்றது.இந்திய ஒன்றிய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக அமைதிப்படையென்ற போர்வையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இந்திய ராணுவம் நிலைகொண்ட காலம் அது. தமிழர் தாயகத்தில் அமைதியை ஏற்படுத்தப் போகிறோம் என்று தாயகத்தினுள்ளே நுழைந்து தமிழரின் உரிமைப் போராட்டத்தை முடக்குவதிலும் தொடர்ச்சியான உயிர்க்கொலைகளிலும் ஆக்கிரமிப்பு அடாவடிகளிலும் ஈடுபட்டு வலிந்து போரை திணித்துக் கொண்டிருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிற்கு எதிராக உண்ணாநோன்பிருந்து தம்மையே ஆயுதமாக்கியவர் தான் அண்ணன் திலீபன் அவர்கள்.போராளியாகிய மருத்துவ மாணவன்தமிழர்களின் தன்னாட்சியுரிமைக்கான அறவழிப்போராட்டம் சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசால் ஆயுதமுனை கொண்டு அடக்கியொடுக்கப்பட்ட தருணத்தில், ஆயுத வழியே விடுதலைக்கான ஒரேவழியென எண்ணி இளமைக்கால கனவுகள் யாவற்றையும் தொலைத்து களம்புகுந்த தமிழ் இளம்தலைமுறைகளில் ஒருவன் தான் அண்ணன் திலீபன். மருத்துவ மாணவனாக தேர்வாகிய 1980 காலகட்டத்தில் பேரினவாதத்தின் கொடுமைகளை நேரில் கண்டு, போராடத் துணியாமல் இங்கு எதுவும் மாறப் போவதில்லை என்று முடிவெடுத்து போராளியானவர்.அண்ணன் திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்ஆயுதப்போராட்டம் தான் ஒரேவழியென எண்ணி விடுதலைக் களம்புகுந்த அண்ணன் திலீபன். தமிழர் தேசத்தில் அமைதிப்படையென்ற பெயரில் வலிந்து போரைத்திணித்துக் கொண்டிருந்த காந்தி தேசத்திற்கு அதன் மொழியில் சொன்னால் ஒரு வேளை புரியுமோ என்றெண்ணி 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா அறப்போரைத் தொடங்கினார்.01. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும்.02. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.03.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.04.ஊர்க்காவல்ப் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்பட்ட வேண்டும்.05. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.என்னும் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் கூட அருந்தப் போவதில்லை என்று அறிவித்து தொடங்கப்பட்ட அண்ணனின் உண்ணா அறப்போர், காந்தி தேசத்தின் செவிகளை எட்டவும் இல்லை, சனநாயகத்தின் கதவுகளை தட்டவும் இல்லை.உண்ணாவிரதம் தொடங்கப்பட்ட நான்கு நாட்களாக பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வாசித்த அண்ணனால் 5ஆம் நாளிலிருந்து எதையும் வாசிக்க முடியவில்லை, போர்வைக்குள்ளேயே புதைந்து கிடந்தார். தன்னை நோக்கி கதறி அழுதவர்களுக்கும், போராட்டத்தை கைவிடக்கோரி கேட்டுக் கொண்டவர்களுக்கும், தனது சிறு புன்னகையை பதிலாகக் கொடுத்து தான் இறுவரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் உறுதி கொண்டிருந்தார்."ஒ. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத் தா உன் பாதணிகளை எனக்கு தா உன் ஆயுதங்களை எனக்கு தா" எனும் அண்ணன் விரும்பிக் கேட்கும் பாடல் உண்ணாவிரதக் களத்திலே ஒலித்துக் கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மரணத்தை நெருக்கிக் கொண்டிருந்தது, காந்தி தேசம் அகிம்சைக்கு மதிப்பளித்து கோரிக்கைக்கு செவி கொடுக்கும் என நம்பியிருந்த தமிழர்களின் எண்ணம் தகரத் தொடங்கியது.திலீபனின் எனும் காவியத்தின் இறுதி அத்தியாயம்11ஆம் நாள் மாலை 4 மணியளவில் அண்ணன் முற்றிலுமாக சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று, சுவாசிக்கவே கடினப்பட்டுக் கொண்டிருந்தார. அன்றிரவு அண்ணனுக்குப் பிடித்த "ஓ மரணித்த வீரனே" பாடல் மீண்டும் ஒலிபரப்பப்ட்ட போது மக்கள் பெரும் அழுத்தத்தில் வெடித்து அழுதனர்.உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ஆம் நாள் நிறைவில் காலை 10.48 மணிக்கு அண்ணன் உயிர் பிரிந்தது. 265 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, உலகச் சமூகத்திற்கு சனநாயக. அகிம்சை வகுப்பெடுத்து தமிழர் தாயகத்திற்கு விடைகொடுத்துச் சென்றான் அந்த 23 வயதுப் போராளி.காந்தி தேசமோ சனாநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் உலக சமூகமோ தமது கைகளை இறுக்கட்டி அண்ணன் திலீபனின் சாவை வேடிக்கை தான் பார்த்தன. செப்டெம்பர் 26 ஆம் திகதி, காந்தி தேசத்தின் நாட்களில் அதுவொரு அவமானம் நிறைந்த கறுப்பு நாள்நமக்கு, அறவழியில் போராடியவர்களைத் தெரியும் ஆயுத வழியில்ப் போராடியவர்களைத் தெரியும் ஆனால், ஆயுதம் ஏந்திய எம் தமிழ் இளைஞர்களிற்கு அறவழியிலும் போராடத்தெரியும் என்று காட்டிய தமிழ்ப் பெருமகன் எங்களின் அண்ணன் தியாகதீபம் திலீபன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement