• Apr 28 2024

யாழ்,பண்ணை சுற்று வட்டத்தை கலக்கும் பாரம்பரிய உணவு திருவிழா! samugammedia

Tamil nila / Apr 15th 2023, 6:57 pm
image

Advertisement

யாழ்,பண்ணை சுற்று வட்டத்தை கலக்கும்  பாரம்பரிய  உணவு திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.





யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே அருகிவரும் பாரம்பரிய உணவுப்பழக்கத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தால் நடாத்தப்படும் யாழ் பாரம்பரிய உணவுத்திருவிழா இன்று  மதியம் 02.00 மணி முதல்  இரவு 09.00 மணி வரை இடபெறுகின்றது.



பாரம்பரிய வாத்தியங்களை கொண்ட இசை நிகழ்ச்சியுடன் இந் நிகழ்வு அரம்பமாகியது. 

யாழ்ப்பாணம் , பண்ணை சுற்றுவட்டாரத்தில் 40 இற்கும் மேற்பட்ட கூடாரங்களில், கூழ் வகைகள் பலகாரங்கள் தீன்பண்டங்கள் விழாக்கால விசேட உணவுவகைகள் மற்றும் பற்பல சுவையான உணவுவகைகள் போன்ற   உணவு வகைகளை மக்கள் அனைவரும் ருசித்து  மகிழும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய உணவுத்  திருவிழாவிற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் வேறுபட்ட பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுயமுயற்சியாளர்களின் பங்களிப்புடன் உணவு திருவிழாவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உள்ளூர் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.




யாழ்,பண்ணை சுற்று வட்டத்தை கலக்கும் பாரம்பரிய உணவு திருவிழா samugammedia யாழ்,பண்ணை சுற்று வட்டத்தை கலக்கும்  பாரம்பரிய  உணவு திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே அருகிவரும் பாரம்பரிய உணவுப்பழக்கத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தால் நடாத்தப்படும் யாழ் பாரம்பரிய உணவுத்திருவிழா இன்று  மதியம் 02.00 மணி முதல்  இரவு 09.00 மணி வரை இடபெறுகின்றது.பாரம்பரிய வாத்தியங்களை கொண்ட இசை நிகழ்ச்சியுடன் இந் நிகழ்வு அரம்பமாகியது. யாழ்ப்பாணம் , பண்ணை சுற்றுவட்டாரத்தில் 40 இற்கும் மேற்பட்ட கூடாரங்களில், கூழ் வகைகள் பலகாரங்கள் தீன்பண்டங்கள் விழாக்கால விசேட உணவுவகைகள் மற்றும் பற்பல சுவையான உணவுவகைகள் போன்ற   உணவு வகைகளை மக்கள் அனைவரும் ருசித்து  மகிழும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பாரம்பரிய உணவுத்  திருவிழாவிற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் வேறுபட்ட பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுயமுயற்சியாளர்களின் பங்களிப்புடன் உணவு திருவிழாவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உள்ளூர் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement