பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தமக்கு, சம்பள உயர்வு கோரியும்,
தற்போது பிறிதொரு நிறுவனம் ஒன்று, எம்மை பொறுப்பெடுக்க வேண்டிய நிலையில் , அந்நிறுவனம் எம்மை உரிய முறையில் பொறுப்பெடுக்கவில்லை, உடனடியாக அந்நிறுவனம் எம்மை பொறுப்பெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக, வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு என்பன கேள்வுக்குள்ளாகியுள்ளதுடன்,
நோயாளர்களை பார்வையிட வருவோர் கட்டுப்பாடுகள் இன்றி வைத்தியசாலை விடுதிகளுக்கு செல்வதனால், நோயாளிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், சிகிச்சை வழங்குவதிலும் நெருக்கடி நிலைமை காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தமக்கு, சம்பள உயர்வு கோரியும், தற்போது பிறிதொரு நிறுவனம் ஒன்று, எம்மை பொறுப்பெடுக்க வேண்டிய நிலையில் , அந்நிறுவனம் எம்மை உரிய முறையில் பொறுப்பெடுக்கவில்லை, உடனடியாக அந்நிறுவனம் எம்மை பொறுப்பெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டம் காரணமாக, வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு என்பன கேள்வுக்குள்ளாகியுள்ளதுடன்,நோயாளர்களை பார்வையிட வருவோர் கட்டுப்பாடுகள் இன்றி வைத்தியசாலை விடுதிகளுக்கு செல்வதனால், நோயாளிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், சிகிச்சை வழங்குவதிலும் நெருக்கடி நிலைமை காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.