• Nov 26 2024

யாழ். நீதிமன்றுக்கு முன்னால் கைப்பேசி திருடிய திருடன் கைது...!

Anaath / Jun 2nd 2024, 6:42 pm
image

யாழ். நீதிமன்றத்துக்கு முன்னால் தொலைபேசியை  திருடிய திருடன் பொலிஸாரால்  இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

நபர் ஒருவர் கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்றிற்கு முன் முச்சக்கரவண்டியினை நிறுத்திவிட்டு நீதிமன்றிற்கு சென்று விட்டு வந்து பார்த்த பொழுது முச்சக்கரவண்டியின் டாஸ் போட்டை உடைத்து அதற்குள் இருந்த ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி களவாடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். அந்தவகையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சிசிடிவி காட்சியின் உதவியுடன் குறித்த நபரை மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்து யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைகளை முன்னெடுத்தவேளை, குறித்த தொலைபேசியினை வெறும் 30000/=ரூபா பணத்திற்கு ஆறுகால்மடம்  ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவருக்கு விற்பனை செய்த விடயம் தெரிய வந்தது.

இந்நிலையில் கைப்பேசியை விற்பனை செய்த திருடனையும், அதனை வாங்கியவரையும் கைது செய்ததுடன், அந்த தொலைபேசியையும் மீட்டு பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் பாரப்படுத்தினர்.

குறித்த சந்தேகநபர் சைக்கிள் திருட்டுகளில் சிக்கி ஆறுமாத கால சிறை தண்டனை பெற்று விடுதலையாகி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நீதிமன்றுக்கு முன்னால் கைப்பேசி திருடிய திருடன் கைது. யாழ். நீதிமன்றத்துக்கு முன்னால் தொலைபேசியை  திருடிய திருடன் பொலிஸாரால்  இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நபர் ஒருவர் கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்றிற்கு முன் முச்சக்கரவண்டியினை நிறுத்திவிட்டு நீதிமன்றிற்கு சென்று விட்டு வந்து பார்த்த பொழுது முச்சக்கரவண்டியின் டாஸ் போட்டை உடைத்து அதற்குள் இருந்த ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி களவாடப்பட்டிருந்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். அந்தவகையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சிசிடிவி காட்சியின் உதவியுடன் குறித்த நபரை மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்து யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.விசாரணைகளை முன்னெடுத்தவேளை, குறித்த தொலைபேசியினை வெறும் 30000/=ரூபா பணத்திற்கு ஆறுகால்மடம்  ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவருக்கு விற்பனை செய்த விடயம் தெரிய வந்தது.இந்நிலையில் கைப்பேசியை விற்பனை செய்த திருடனையும், அதனை வாங்கியவரையும் கைது செய்ததுடன், அந்த தொலைபேசியையும் மீட்டு பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் பாரப்படுத்தினர்.குறித்த சந்தேகநபர் சைக்கிள் திருட்டுகளில் சிக்கி ஆறுமாத கால சிறை தண்டனை பெற்று விடுதலையாகி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement