• Dec 01 2022

தியாக தீபம் திலீபனின் ஜனனம் தொடக்கம் மரணம் வரை! பேரணியை ஆரம்பித்தது பல்கலை மாணவர் படை

Chithra / 2 months ago
image

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி பேரணி இன்று முற்பகல் ஆரம்பமானது.

இதன்போது திலீபனின் நினைவுருவ படத்தை தாங்கிய ஊர்தியோடு மாணவர்கள் சிவப்பு மஞ்சள் வர்ண எழுச்சிக் கொடிகளை தாங்கிய வண்ணம் கால்நடையாகவும், துவிசக்கர வண்டிகளிலும், மோட்டார் வாகனத்திலும் பேரணியாக வலம்வர ஆரம்பித்தனர்.

யாழ் பல்கலையின் முன்றலில் இருந்து பரமேஸ்வரா சந்தியினை அடைந்து பலாலி வீதியீனூடாக  திலீபனுடைய இல்லத்திற்குச் சென்று, பின்னர் மருதனார்மடச் சந்தியை அடைந்து கேகேஸ் வீதியினூடாக யாழ்ப்பாணத்தினை அடைந்து பின்னர் நல்லூரில்  அமைந்துள்ள தியாக தீபத்தின் பிரதான நினைவுத் தூபிக்குச் சென்று நினைவேந்தலை மேற்கொண்டு அடையாளம் உண்ணாவிரத போராட்டத்திலும் மாணவர்கள் கலந்து கொண்டு பின்னர் யார் பல்கலைக்கழகத்தை மீண்டும் ஊர்தி பவனி வந்தடைய உள்ளது.

ஊர்திப்பவனி இடம்பெற்ற பகுதிகளில் தியாக தீபத்தின் கோரிக்கைகள் அடங்கிய  மாணவர்களால் துண்டு பிரசுரங்களும் பல்கலை மாணவர்களால் விநியோகிக்கப்பட்டது.

இதன்போது யார் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியத்தினர் உட்பட பலமாணவர்கள் எழுச்சியாக கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்