வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை காரைதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் சுமார் 4 1/2 பவுண் தங்க நகைகள் உட்பட பணம் கடந்த வியாழக்கிழமை(27) இரவு திருடப்பட்டுள்ளதாக மறுநாள் வெள்ளிக்கிழமை (28) வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளர்கள் குடும்ப சகிதம் அருகில் உள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அன்றைய தினம் இரவு 10 மணியளவில் தமது வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி உட்பட அலுமாரி இருந்த அறை கதவு திறந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருட்டு - மாவடிப்பள்ளியில் சம்பவம் வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை காரைதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர்.அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் சுமார் 4 1/2 பவுண் தங்க நகைகள் உட்பட பணம் கடந்த வியாழக்கிழமை(27) இரவு திருடப்பட்டுள்ளதாக மறுநாள் வெள்ளிக்கிழமை (28) வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளர்கள் குடும்ப சகிதம் அருகில் உள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அன்றைய தினம் இரவு 10 மணியளவில் தமது வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.இந்நிலையில் நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி உட்பட அலுமாரி இருந்த அறை கதவு திறந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.உடனடியாக பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.