• May 08 2024

உறுதிமொழியை மீறியுள்ள மின்சாரசபை - உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள ஜோசப் ஸ்டாலின்!

Chithra / Feb 1st 2023, 8:31 pm
image

Advertisement

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டினை தடுக்கும் உத்தரவினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் மனுவொன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

குறித்த மனுவில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உறுதிமொழி வழங்கியதாக மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த உறுதிமொழியை மீறி பிரதிவாதிகள் மின்சாரத்தை துண்டித்ததால், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கடுமையாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவெ பரீட்சைகளின் போது ஏற்படும் மின்வெட்டுகளை தடுக்கும் வகையில் பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

உறுதிமொழியை மீறியுள்ள மின்சாரசபை - உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள ஜோசப் ஸ்டாலின் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டினை தடுக்கும் உத்தரவினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் மனுவொன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உறுதிமொழி வழங்கியதாக மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அந்த உறுதிமொழியை மீறி பிரதிவாதிகள் மின்சாரத்தை துண்டித்ததால், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கடுமையாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.எனவெ பரீட்சைகளின் போது ஏற்படும் மின்வெட்டுகளை தடுக்கும் வகையில் பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement