• Sep 17 2024

இறைச்சி கட்டுப்பாட்டு விலை தொடர்பில் கல்முனை மாநகர சபையினால் அதிரடி களப் பரிசோதனை! samugammedia

Tamil nila / Apr 5th 2023, 4:48 pm
image

Advertisement

கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு, அது   செவ்வாய்க்கிழமை (04) தொடக்கம் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் களப் பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


இக்களப் பரிசோதனையில் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டபொல, வருமான பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.அஹத் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.


கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து இறைச்சிக் கடைகளிலும் அதிரடியாக இப்பரிசோதன மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது கட்டுப்பாட்டு விலை உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாத இறைச்சிக் கடைகளில் அவ்விலைப்பட்டியலானது மாநகர சபை உத்தியோகத்தர்களினால் ஒட்டிவிடப்பட்டுள்ளன. அத்துடன் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தத் தவறிய வியாபாரிகளுக்கு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


கல்முனை மாநகர சபை எல்லையினுள் ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென மாநகர ஆணையாளர் தலைமையில் இறைச்சிக் கடைக்காரர்களின் பங்கேற்புடன்   திங்கட்கிழமை(03) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறைச்சி கட்டுப்பாட்டு விலை தொடர்பில் கல்முனை மாநகர சபையினால் அதிரடி களப் பரிசோதனை samugammedia கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு, அது   செவ்வாய்க்கிழமை (04) தொடக்கம் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் களப் பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இக்களப் பரிசோதனையில் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டபொல, வருமான பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.அஹத் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து இறைச்சிக் கடைகளிலும் அதிரடியாக இப்பரிசோதன மேற்கொள்ளப்பட்டது.இதன்போது கட்டுப்பாட்டு விலை உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாத இறைச்சிக் கடைகளில் அவ்விலைப்பட்டியலானது மாநகர சபை உத்தியோகத்தர்களினால் ஒட்டிவிடப்பட்டுள்ளன. அத்துடன் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தத் தவறிய வியாபாரிகளுக்கு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.கல்முனை மாநகர சபை எல்லையினுள் ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென மாநகர ஆணையாளர் தலைமையில் இறைச்சிக் கடைக்காரர்களின் பங்கேற்புடன்   திங்கட்கிழமை(03) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement