• Jan 19 2025

Tharmini / Jan 19th 2025, 4:05 pm
image

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, பூங்காவின் அடுத்த பகுதியையும் கடலலை கொண்டு சென்றுள்ளது.  

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்தப் பூங்கா அலங்கரித்துக் கொண்டிருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு விழுந்ததனால், பூங்காவின் ஒரு பகுதியை கடல் அலை அடித்துச் சென்றிருந்தது. 

அந்த நேரத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரும், வெளிவவிகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவும் நேரில் வந்து இந்த பூங்காவை பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது, எதிர்காலத்தில் இந்தப் பூங்காவை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் அதற்கிடையில், இன்று (19) இன்னும் ஒரு பெரிய மரமும் வேரோடு விழுந்து, பூங்காவின் அடுத்த பகுதியும் கடலுக்கு இரையாகியுள்ளது. 

இந்த நிலையில், பூங்காவின் எஞ்சியுள்ள பகுதி அவசரமாக பாதுகாக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், இன்னும் ஒரு வெள்ளம் ஏற்படுகின்ற போது, பூங்காவை முழுமையாக இழக்க வேண்டி ஏற்படும். எனவே, பூங்காவை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



   


கிண்ணியா கடற்கரைப் பூங்கா கடலலையால் பாதிப்பு கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, பூங்காவின் அடுத்த பகுதியையும் கடலலை கொண்டு சென்றுள்ளது.  கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்தப் பூங்கா அலங்கரித்துக் கொண்டிருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு விழுந்ததனால், பூங்காவின் ஒரு பகுதியை கடல் அலை அடித்துச் சென்றிருந்தது. அந்த நேரத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரும், வெளிவவிகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவும் நேரில் வந்து இந்த பூங்காவை பார்வையிட்டிருந்தனர்.இதன்போது, எதிர்காலத்தில் இந்தப் பூங்காவை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்திருந்தார்.ஆனாலும் அதற்கிடையில், இன்று (19) இன்னும் ஒரு பெரிய மரமும் வேரோடு விழுந்து, பூங்காவின் அடுத்த பகுதியும் கடலுக்கு இரையாகியுள்ளது. இந்த நிலையில், பூங்காவின் எஞ்சியுள்ள பகுதி அவசரமாக பாதுகாக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், இன்னும் ஒரு வெள்ளம் ஏற்படுகின்ற போது, பூங்காவை முழுமையாக இழக்க வேண்டி ஏற்படும். எனவே, பூங்காவை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement