• May 10 2025

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்ணியா அக்ஸா கல்லூரியின் வீதி ஓட்ட போட்டி..!

Sharmi / Feb 5th 2025, 9:05 am
image

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் 97 வருடாந்த இல்ல விளையாட்டு விழாவின் ஆரம்பப் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்ட, வீதி ஓட்டப் போட்டி நேற்றையதினம்(4) காலை இடம்பெற்றது. 

கல்லூரி அதிபர் எம். எம். முலவ்பர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

ஆரம்ப நிகழ்வாக, வீதியோட்டம் சூரங்கல் சந்தியில் இருந்து ஆரம்பித்து, பாடசாலை சந்திவரை 7 கிலோ மீற்றர் தூரம் மாணவர்களால் ஓடி முடிக்கப்பட்டது.

மூன்று இல்லங்களிலிருந்தும் 90 வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் கெனரி இல்லத்தை சேர்ந்த வீரர் யூசுப் அக்மல் மற்றும் ஏ.எஸ்.எம். அப்சான் ஆகியோர் முறையே முதலாம் மற்றும் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

ஹெமலியோ இல்லத்தைச் ஏ.கே.எம். அகீல், என். எம். ஹாதிம் மற்றும் எச்.எம்.ஹம்தி ஆகியோர் முறையே இரண்டாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். 

இந்த வெற்றி வீரர்களுக்கு முறையே ரூபா 25000, 20000, 15000,10000, 5000 பணப் பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.  


சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்ணியா அக்ஸா கல்லூரியின் வீதி ஓட்ட போட்டி. நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் 97 வருடாந்த இல்ல விளையாட்டு விழாவின் ஆரம்பப் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்ட, வீதி ஓட்டப் போட்டி நேற்றையதினம்(4) காலை இடம்பெற்றது. கல்லூரி அதிபர் எம். எம். முலவ்பர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக, வீதியோட்டம் சூரங்கல் சந்தியில் இருந்து ஆரம்பித்து, பாடசாலை சந்திவரை 7 கிலோ மீற்றர் தூரம் மாணவர்களால் ஓடி முடிக்கப்பட்டது.மூன்று இல்லங்களிலிருந்தும் 90 வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.இந்தப் போட்டியில் கெனரி இல்லத்தை சேர்ந்த வீரர் யூசுப் அக்மல் மற்றும் ஏ.எஸ்.எம். அப்சான் ஆகியோர் முறையே முதலாம் மற்றும் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.ஹெமலியோ இல்லத்தைச் ஏ.கே.எம். அகீல், என். எம். ஹாதிம் மற்றும் எச்.எம்.ஹம்தி ஆகியோர் முறையே இரண்டாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இந்த வெற்றி வீரர்களுக்கு முறையே ரூபா 25000, 20000, 15000,10000, 5000 பணப் பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.  

Advertisement

Advertisement

Advertisement

Buy Now