• Apr 30 2024

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களின் வீதியோட்டம் நாளை!SamugamMedia

Sharmi / Mar 2nd 2023, 9:07 pm
image

Advertisement

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்டம் 03.03.2023 வெள்ளி காலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

வீதியோட்ட நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.க. கணபதிப்பிள்ளையும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி எஸ் பரமானந்தம், கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ கருணலிங்கம், லயன் டாக்டர் வி. தியாகராஜா இலங்கை தமிழர் ஆசிரிய சங்க செயலாளர் சரா புவனேஸ்வரன்  முன்னாள் விரிவுரையாளர் வி. எஸ். குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  

ஆண் ஆசிரிய மாணவர்கள் கலாசாலை முன்றிலில் இருந்து புறப்பட்டு இராச வீதி வழியாக நல்லூர் கோவிலை அடைந்து பருத்தித்துறை வீதி வழியாக இருபாலை சந்தியை அடைந்து கலாசாலையை வந்தடைவர்.

பெண்ஆசிரிய மாணவர்கள் கலாசாலை முன்றிலிருந்து புறப்பட்டு இராஜ வீதி வழியாக இராமசாமி பரிகாரி சந்தி, ஆடியபாதம் வீதி வழியாக கல்வியங்காட்டு சந்தியை அடைந்து பருத்தித்துறை வீதி வழியாக இருபாலை சந்தியை அடைந்து கலாசாலை வாயிலை வந்தடைவர்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டில் இந்த வீதியோட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களின் வீதியோட்டம் நாளைSamugamMedia கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்டம் 03.03.2023 வெள்ளி காலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. வீதியோட்ட நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.க. கணபதிப்பிள்ளையும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி எஸ் பரமானந்தம், கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ கருணலிங்கம், லயன் டாக்டர் வி. தியாகராஜா இலங்கை தமிழர் ஆசிரிய சங்க செயலாளர் சரா புவனேஸ்வரன்  முன்னாள் விரிவுரையாளர் வி. எஸ். குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  ஆண் ஆசிரிய மாணவர்கள் கலாசாலை முன்றிலில் இருந்து புறப்பட்டு இராச வீதி வழியாக நல்லூர் கோவிலை அடைந்து பருத்தித்துறை வீதி வழியாக இருபாலை சந்தியை அடைந்து கலாசாலையை வந்தடைவர்.பெண்ஆசிரிய மாணவர்கள் கலாசாலை முன்றிலிருந்து புறப்பட்டு இராஜ வீதி வழியாக இராமசாமி பரிகாரி சந்தி, ஆடியபாதம் வீதி வழியாக கல்வியங்காட்டு சந்தியை அடைந்து பருத்தித்துறை வீதி வழியாக இருபாலை சந்தியை அடைந்து கலாசாலை வாயிலை வந்தடைவர்.கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டில் இந்த வீதியோட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement