• Apr 26 2024

போதைப்பொருளை ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கை எடுத்து வருகின்றது!! புஸ்பா விஸ்வநாதன்!!

crownson / Dec 22nd 2022, 12:48 pm
image

Advertisement

கொட்டக்கலை பகுதியில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் அவற்றை முற்றாக ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கையையும் எடுத்து வருவதாக கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்  இவ்விடயம் சம்பந்தமாக கொட்டகலை வர்த்தக சங்கம் பத்தனை பொலிஸ் நிலையம் மற்றும் கிராமசேவை அதிகாரிகளுடன் இணைந்து பாடசாலை மட்டத்தில் தீவிரம் அடையாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

முதல் கட்டமாக கடந்த மாதம் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் என பல அமைப்புகளை ஒன்றிணைத்து நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பங்கு பற்றுதலுடன் ஆலோசணை கூட்டமொன்றை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான மண்டபத்தில் நடத்தியது.

அந்த கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி கடந்த வாரம் 14ம் திகதி நுவரெலியா அதிபயங்கர மருந்து பொருட்கள் கட்டுபாட்டு சபை அதிகாரிகளால் திம்புள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்ட்ட 18 பாடசலைகள் ஆசிரியர்களுக்கும் சிவில் சமூக செற்பாட்டாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கொட்டகலை வர்த்தக சங்கம் 14 பெயரை கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அக்குழுவானது பாடசாலை மட்டத்திலும் வெளியிடங்களிலும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பாவனையாளர்களை இழக்கு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

அக்குழுவில் ஓய்வு பெற்ற உதவி பணிப்பாளரான இ.லோகநாதன்,  வடிவேலு, ஓய்வு பெற்ற கேம்ப்ரிட்ஜ் கல்லூரியின் அதிபரான சி.ஞானபிரகாசம், ஓய்வு பெற்ற ஆசிரியர் கலாசாலையின் அதிபர் எஸ்.ஜெயகுமார், வர்த்தக சங்கம் சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஆர்.கருப்பையா, டீ.எம்.சொக்கலிங்கம், பூவலிங்கம், இன்னும் பல சமூக ஆர்வாளர்களும்,  ஒருங்கமைப்பு நடவடிக்கைகு டீ.தவராஜ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கொட்டகலை பகுதியி இவ்வாறான போதைப்பொருள் பாவனையை தடுக்க அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கை எடுத்து வருகின்றது புஸ்பா விஸ்வநாதன் கொட்டக்கலை பகுதியில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் அவற்றை முற்றாக ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கையையும் எடுத்து வருவதாக கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்  இவ்விடயம் சம்பந்தமாக கொட்டகலை வர்த்தக சங்கம் பத்தனை பொலிஸ் நிலையம் மற்றும் கிராமசேவை அதிகாரிகளுடன் இணைந்து பாடசாலை மட்டத்தில் தீவிரம் அடையாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.முதல் கட்டமாக கடந்த மாதம் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் என பல அமைப்புகளை ஒன்றிணைத்து நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பங்கு பற்றுதலுடன் ஆலோசணை கூட்டமொன்றை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான மண்டபத்தில் நடத்தியது.அந்த கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி கடந்த வாரம் 14ம் திகதி நுவரெலியா அதிபயங்கர மருந்து பொருட்கள் கட்டுபாட்டு சபை அதிகாரிகளால் திம்புள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்ட்ட 18 பாடசலைகள் ஆசிரியர்களுக்கும் சிவில் சமூக செற்பாட்டாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கொட்டகலை வர்த்தக சங்கம் 14 பெயரை கொண்ட குழு நியமிக்கப்பட்டது.அக்குழுவானது பாடசாலை மட்டத்திலும் வெளியிடங்களிலும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பாவனையாளர்களை இழக்கு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.அக்குழுவில் ஓய்வு பெற்ற உதவி பணிப்பாளரான இ.லோகநாதன்,  வடிவேலு, ஓய்வு பெற்ற கேம்ப்ரிட்ஜ் கல்லூரியின் அதிபரான சி.ஞானபிரகாசம், ஓய்வு பெற்ற ஆசிரியர் கலாசாலையின் அதிபர் எஸ்.ஜெயகுமார், வர்த்தக சங்கம் சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஆர்.கருப்பையா, டீ.எம்.சொக்கலிங்கம், பூவலிங்கம், இன்னும் பல சமூக ஆர்வாளர்களும்,  ஒருங்கமைப்பு நடவடிக்கைகு டீ.தவராஜ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் கொட்டகலை பகுதியி இவ்வாறான போதைப்பொருள் பாவனையை தடுக்க அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement