• Sep 23 2024

இன்று நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு ! samugammedia

Tamil nila / Oct 4th 2023, 5:48 pm
image

Advertisement

லாப் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.

இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபா அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபா அதிகரிக்கப்பட்டு 3985 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் லிட்ரோ எரிவாயு விலை​யும் சற்றுமுன்னர் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3470 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1393 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோகிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளைக் கருத்தில் கொண்டு, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று பிற்பகல் (அக்டோபர் 04) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இன்று நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு samugammedia லாப் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபா அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.அத்துடன், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபா அதிகரிக்கப்பட்டு 3985 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.மேலும் லிட்ரோ எரிவாயு விலை​யும் சற்றுமுன்னர் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3470 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1393 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2.3 கிலோகிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளைக் கருத்தில் கொண்டு, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று பிற்பகல் (அக்டோபர் 04) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement