• Jan 11 2025

தொல்லியல் எனும் பெயரில் நில ஆக்கிரமிப்பு ஆரம்பமா? வீதிக்கிறங்க தயாராகும் திருமலை மக்கள்

Chithra / Jan 7th 2025, 7:01 am
image


வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது. 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? 

எதிர்காலத்தில் இந்த பகுதி கையகப்படுத்தப்படுமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொல்லியல் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த 28.12.2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி முதலாம் திகதி   மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொல்லியல் எனும் பெயரில் நில ஆக்கிரமிப்பு ஆரம்பமா வீதிக்கிறங்க தயாராகும் திருமலை மக்கள் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது அதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா எதிர்காலத்தில் இந்த பகுதி கையகப்படுத்தப்படுமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.தொல்லியல் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.கடந்த 28.12.2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி முதலாம் திகதி   மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement