• Dec 14 2024

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

Tamil nila / Nov 29th 2024, 10:02 pm
image

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை, குருணாகல், கேகாலை, கண்டி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

அதேநேரம், அதிகரித்திருந்த அனைத்து ஆறுகளின் நீர் மட்டமும் தற்சமயம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்டோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை, குருணாகல், கேகாலை, கண்டி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.அதேநேரம், அதிகரித்திருந்த அனைத்து ஆறுகளின் நீர் மட்டமும் தற்சமயம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்டோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement