• Nov 28 2024

உயிரிழக்க முன் கடலில் மிதந்த பாட்டிலுடன் எடுத்த கடைசி செல்ஃபி - வைரலாகும் மீனவர்களின் புகைப்படம்

Chithra / Jul 4th 2024, 11:10 am
image


கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன், பாட்டிலுடன் உயிரிழந்த மீனவர்களும், தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மீனவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற 'Devon 5' மீன்பிடிக் கப்பலில்  பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, ​​கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கப்பலில் பயணித்த 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 பேர்  உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன், பாட்டிலுடன் உயிரிழந்த மீனவர்களும், தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மீனவர்களும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில்  உயிரிழந்த  கடற்றொழிலாளர்களின் சடலங்கள் நேற்று (03) காலை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

டெவோன் 05 என்ற  கடற்றொழில் கப்பலும் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியிருந்த நிலையில், மற்றுமொரு கப்பல் மூலம் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது.

நீதவானின் விசாரணையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த பானத்தை அருந்திய மேலுமொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

உயிரிழக்க முன் கடலில் மிதந்த பாட்டிலுடன் எடுத்த கடைசி செல்ஃபி - வைரலாகும் மீனவர்களின் புகைப்படம் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன், பாட்டிலுடன் உயிரிழந்த மீனவர்களும், தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மீனவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற 'Devon 5' மீன்பிடிக் கப்பலில்  பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, ​​கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர்.அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கப்பலில் பயணித்த 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 பேர்  உயிரிழந்தனர்.இந்நிலையில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன், பாட்டிலுடன் உயிரிழந்த மீனவர்களும், தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மீனவர்களும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.இந்நிலையில்  உயிரிழந்த  கடற்றொழிலாளர்களின் சடலங்கள் நேற்று (03) காலை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.டெவோன் 05 என்ற  கடற்றொழில் கப்பலும் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியிருந்த நிலையில், மற்றுமொரு கப்பல் மூலம் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது.நீதவானின் விசாரணையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன.அத்துடன், குறித்த பானத்தை அருந்திய மேலுமொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

Advertisement

Advertisement

Advertisement