யாழில் நெசவு உற்பத்திக் கிராமம் அங்குராப்பணம்

133

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட செயலகத்தின் எற்பாட்டில், மாதர்களுக்கான பற்றிக் நெசவு உற்பத்திக் கிராமத்தினை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ். நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே/89 கிராமசேவையாளர் பிரிவில் இன்று சனிக்கிழமை இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வினை யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்தின் பிரதேசசெயலாளர், யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராம சேவையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: