மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள
மஸ்கெலியா நகருக்கும் புரவுன்லோ தோட்ட மக்களின் நலனுக்காக நகரை அண்டிய
பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அந்தியொட்டி கிரியைகள் மடம் அமைக்க இன்று
காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.





இந்த நிகழ்வில் புரவுன்லோ தோட்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் நகரில் உள்ள வர்த்தகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விசேட அதிதியாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த
கிரியை மண்டபம் கட்ட நகர வர்த்தகர்கள் மற்றும் புரவுன்லோ தோட்ட மக்களின்
உதவிகள் வழங்கப்படும் என புரவுன்லோ தோட்ட இளைஞர் மன்ற தலைவர் முத்து
தெரிவித்தார்.




