• May 06 2024

கழிவறைக்குச் செல்வதாகக் கூறி சென்ற இளம்பெண் மாயம்- கவலையை ஏற்படுத்தியுள்ள பின்னணி! samugammedia

Tamil nila / Jun 3rd 2023, 4:18 pm
image

Advertisement

பிரான்சில் இளம்பெண் ஒருவரது கார் பிரேக் டவுன் ஆன நிலையில், போக்குவரத்துப் பொலிஸார் ஒருவர் அவரது உதவிக்கு வந்துள்ளார். ஆனால், அவரது கண்கணிப்பிலேயே அந்தப் பெண் மாயமாகியுள்ளார்.

இந்நிலையில், Mélanie (35) என்னும் இளம்பெண், செவ்வாயன்று பிரான்சிலுள்ள Dordogne என்ற இடத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மதியம் ஒரு மணியளவில் அவரது காரில் பழுது ஏற்பட்டுள்ளது.உடனே, போக்குவரத்து பொலிஸார் ஒருவர் அவரது உதவிக்கு வந்துள்ளார். தான் கழிவறைக்குச் செல்லவேண்டும் என Mélanie கூற, அந்த பொலிஸார் அவரை தனது வாகனத்தில் அருகிலுள்ள கழிவறை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் கழிவறைக்குச் சென்று வெகு நேரம் ஆகியும் Mélanie திரும்பாததால் கவலையடைந்த அந்த போக்குவரத்து பொலிஸார், உடனே மற்ற பொலிஸாரை உதவிக்கு அழைத்துள்ளார்.

பிரச்சினை என்னவென்றால், Mélanieக்கு disorientation episodes என்னும், தான் எங்கே இருக்கிறேன், தான் யார் என்பதை மறந்துபோகும் பிரச்சினை உள்ளது. இதற்கு முன்பும் ஒரு முறை அவர் 15 நாட்கள் வரை காணாமல் போயுள்ளாராம்.ஆகவே, Mélanieயின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ள நிலையில், பொலிஸார் Mélanieயைக் காணாமல் போன நபர் என அறிவித்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

கழிவறைக்குச் செல்வதாகக் கூறி சென்ற இளம்பெண் மாயம்- கவலையை ஏற்படுத்தியுள்ள பின்னணி samugammedia பிரான்சில் இளம்பெண் ஒருவரது கார் பிரேக் டவுன் ஆன நிலையில், போக்குவரத்துப் பொலிஸார் ஒருவர் அவரது உதவிக்கு வந்துள்ளார். ஆனால், அவரது கண்கணிப்பிலேயே அந்தப் பெண் மாயமாகியுள்ளார்.இந்நிலையில், Mélanie (35) என்னும் இளம்பெண், செவ்வாயன்று பிரான்சிலுள்ள Dordogne என்ற இடத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மதியம் ஒரு மணியளவில் அவரது காரில் பழுது ஏற்பட்டுள்ளது.உடனே, போக்குவரத்து பொலிஸார் ஒருவர் அவரது உதவிக்கு வந்துள்ளார். தான் கழிவறைக்குச் செல்லவேண்டும் என Mélanie கூற, அந்த பொலிஸார் அவரை தனது வாகனத்தில் அருகிலுள்ள கழிவறை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.மேலும் கழிவறைக்குச் சென்று வெகு நேரம் ஆகியும் Mélanie திரும்பாததால் கவலையடைந்த அந்த போக்குவரத்து பொலிஸார், உடனே மற்ற பொலிஸாரை உதவிக்கு அழைத்துள்ளார்.பிரச்சினை என்னவென்றால், Mélanieக்கு disorientation episodes என்னும், தான் எங்கே இருக்கிறேன், தான் யார் என்பதை மறந்துபோகும் பிரச்சினை உள்ளது. இதற்கு முன்பும் ஒரு முறை அவர் 15 நாட்கள் வரை காணாமல் போயுள்ளாராம்.ஆகவே, Mélanieயின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ள நிலையில், பொலிஸார் Mélanieயைக் காணாமல் போன நபர் என அறிவித்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement