யாழ்ப்பாணம் – யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டிருந்து.
அந்தவகையில் இந்த துண்டுப்பிரசுர நிகழ்வில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இணைந்து துண்டுபிரசுரங்களை வழங்கி வைத்திருந்தனர்.
இந்நிகழ்வானது மக்களை வாட்டி வதைத்து வரும் கோத்தா – ரணில் ஆட்சியே வீட்டுக்கு போ ! என்ற தொனிப்பொருளிலே நடைபெற்றிருந்தது .
மேலும் இத்துண்டுப்பிரசுரத்தில் ;
- காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம் ! கோத்தாவை வீட்டுக்கு அனுப்பி நாட்டை மீட்போம் !
- நாட்டையும் மக்களையும் நாசகாரத்திற்கு இட்டுச் சென்ற மக்கள் விரோ அரசியலமைப்பை நிராகரித்து புதிய அரசியலமைப்பைத் தோற்றுவிக்க ஒன்றிணைவோம் !
- கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடன் விடுதலை செய்யக் குரல் கொடுப்போம் !
- உற்பத்திப் பொருளாதாரத்திதை வலியுறுத்தி உள்ளூர் உற்பத்திகளுக்கும் மக்களுடன் இணைந்து செயற்படுவோம் !
- தேசிய இனப்பிரச்சினைத் தீர்வினை வலியுறுத்தி நியாயமான தீர்வுக்கு முன்நிற்போம் !
- ஏகாதிபத்திய மேற்குலக வல்லரசுகளுக்கு நாட்டை விற்பதைத் தடுத்து நாட்டின் இறைமை , சுதந்திரம் சுயாதிபத்தியத்தைப் பாதுகாப்போம் !
- பாராளுமன்றத்திற்கு வெளியே தேசிய ஜனநாயக சபைளை உருவாக்க முன்நிற்போம் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளே ஒன்றிணைய வாரீர் !
- உழைக்கும் மக்களே அனைத்து ஒடுக்குதல்களுக்கு எதிராகவும் ஒன்று பட்டுப் போராட அணிதிரள்வீர்
மற்றும் ,
அரிசி , சீனி , மா , பாண் , பருப்பு முதலிய அன்றாட உணவும் பொருட்களின் விலை அதிகரிப்பைத் தடுத்து நிறுத்தி , கட்டுப்பாட்டு விலையைக் கொண்டு வந்து நடைமுறையாக்கு !
மண்ணெண்ணை , டீசல் , பெற்றோல் , சமையல் எரிவாயு ஆகியவற்றை நியாய விலையில் இலகுவாகப் பெற்றுக்கொள்ள ஆவனசெய்வி மருந்துகள் , மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு , விலை அதிகரிப்பைத் தடுத்தி நிறுத்தி பொது மருத்துவமனைகளுக்கு போதிய மருந்து வகைகளை வழங்கு !
பதுக்கல்களுக்கும் கொள்ளை இலாபத்திற்கும் இடமளிக்காது , கட்டுப்பாட்டு விலைகளைக் கொண்டு வந்து இறுக்கமாகச் செயல்படுத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் உரத்தை வழங்கு !
விவசாய உற்பத்திகளுக்கு நியாய விலை வழங்கு !
விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தேவையான எரிபொருட்களை இலகுவாகப் பெற வழிசெய் !
நீண்ட வரிசைகளில் மக்களை நிற்க வைத்து சாகடிக்காதே ! கள்ளச் சந்தைக்கு இடமாளிக்காதே !போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்ட்டுள்ளன .
பிற செய்திகள்
- திருகோணமலை IOC நிலையத்தில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)
- பொருளாதார தடைகள் உலகை ஆயுத அடிமையாக்குகிறது! சீன அதிபர்
- கறுப்பு சந்தை வியாபாரிகளால் யாழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது! அங்கஜன் காட்டம்!
- அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற முடியுமா?
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka