• Apr 25 2025

முல்லையில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்: சிறுவன் கைது..!

Sharmi / Apr 23rd 2025, 9:41 pm
image

புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்றையதினம் புதுக்குடியிருப்பு  பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை பொலிஸார்  முற்றுகையிட்டுள்ளனர் 

இதன்போது   330 லீற்றர் கோடாவும், 20 லீற்றர் கசிப்பும்,  விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட பெறுமதியான மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  மேலும் சந்தேக நபர்கள் இருவர் தப்பியோடியுள்ளனர். 

இதன்போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுத்தவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லையில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்: சிறுவன் கைது. புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்றையதினம் புதுக்குடியிருப்பு  பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை பொலிஸார்  முற்றுகையிட்டுள்ளனர் இதன்போது   330 லீற்றர் கோடாவும், 20 லீற்றர் கசிப்பும்,  விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட பெறுமதியான மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.அதேவேளை 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  மேலும் சந்தேக நபர்கள் இருவர் தப்பியோடியுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுத்தவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement