• Mar 04 2025

கிளிநொச்சியில் 'இயற்கையைப் பாதுகாப்போம்' விழிப்புணர்வுக் கருத்தரங்கு..!

Sharmi / Mar 3rd 2025, 10:18 am
image

கிளிநொச்சி மாவட்டத்தின்  பரந்தன் பங்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் "இயற்கையைப் பாதுகாப்போம்" எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று(02)  காலை 08.00 மணிக்கு  நடாத்தப்பட்டது.

கிளி. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தினருடன் இணைந்து, கிளி மறைக்கோட்டக் குருமுதல்வரும், பரந்தன் பங்குத்தந்தையுமான அருட்பணி அ.பெ.பெனற் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் கரைச்சிப் பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் பூ.ராஜ்வினோத் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து ஆலய வளாகத்தினுள் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், பயனாளிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.


கிளிநொச்சியில் 'இயற்கையைப் பாதுகாப்போம்' விழிப்புணர்வுக் கருத்தரங்கு. கிளிநொச்சி மாவட்டத்தின்  பரந்தன் பங்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் "இயற்கையைப் பாதுகாப்போம்" எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று(02)  காலை 08.00 மணிக்கு  நடாத்தப்பட்டது.கிளி. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தினருடன் இணைந்து, கிளி மறைக்கோட்டக் குருமுதல்வரும், பரந்தன் பங்குத்தந்தையுமான அருட்பணி அ.பெ.பெனற் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.இதில் கரைச்சிப் பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் பூ.ராஜ்வினோத் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.தொடர்ந்து ஆலய வளாகத்தினுள் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், பயனாளிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement