• Oct 30 2024

யாழ்ப்பாணத்தில் இடி மின்னல் தாக்கம் - மாணவனையும் தாக்கியது!

Tamil nila / Oct 23rd 2024, 7:26 pm
image

Advertisement

 யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் - அராலி மேற்கு பகுதியில், இன்றையதினம் மாணவன் ஒருவன் பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர், இடி - மின்னலுடன் கூடிய வானிலை காணப்பட்ட வேளை வீட்டிற்கு வெளியே சென்றுள்ளான்.

இதன்போது அவன்மீது மின்னல் தாக்கிய நிலையில் வீட்டிற்குள் ஓடிச்சென்று கதறியுள்ளான்.

இதேவேளை அராலி மேற்கு பகுதியில் உள்ள வீட்டின் மின் இணைப்பானது மின்னல் தாக்கத்தினால் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதன்போது விரைந்து செயற்பட்டு மின்சார இணைப்பினை தடை செய்த நிலையில் பாரிய அளவு அசம்பாவிதம் எவையும் ஏற்படவில்லை.

எனவே இடி மின்னல் ஏற்படும் வேளைகளில் வீட்டிற்கு வெளியே அநாவசியமாக நடமாடுவதை தவிர்ப்பதன் மூலம் இடி மின்னல் தாக்கத்தில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


யாழ்ப்பாணத்தில் இடி மின்னல் தாக்கம் - மாணவனையும் தாக்கியது  யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.யாழ்ப்பாணம் - அராலி மேற்கு பகுதியில், இன்றையதினம் மாணவன் ஒருவன் பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர், இடி - மின்னலுடன் கூடிய வானிலை காணப்பட்ட வேளை வீட்டிற்கு வெளியே சென்றுள்ளான்.இதன்போது அவன்மீது மின்னல் தாக்கிய நிலையில் வீட்டிற்குள் ஓடிச்சென்று கதறியுள்ளான்.இதேவேளை அராலி மேற்கு பகுதியில் உள்ள வீட்டின் மின் இணைப்பானது மின்னல் தாக்கத்தினால் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதன்போது விரைந்து செயற்பட்டு மின்சார இணைப்பினை தடை செய்த நிலையில் பாரிய அளவு அசம்பாவிதம் எவையும் ஏற்படவில்லை.எனவே இடி மின்னல் ஏற்படும் வேளைகளில் வீட்டிற்கு வெளியே அநாவசியமாக நடமாடுவதை தவிர்ப்பதன் மூலம் இடி மின்னல் தாக்கத்தில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Advertisement

Advertisement

Advertisement