• Mar 07 2025

மார்ச் மாத விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிடவுள்ள அறிவிப்பு

Chithra / Mar 6th 2025, 9:46 am
image

 

2025 மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று நிதி அமைச்சகத்துடன் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, கலந்துரையாடலின் பின்னர் புதிய விலை திருத்தங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் இலங்கையில் எரிவாயு விலைகள் பொதுவாக ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி திருத்தப்படுகின்றன.

வரவிருக்கும் விலை திருத்தத்திற்கான பரிந்துரைகள் ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாத விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிடவுள்ள அறிவிப்பு  2025 மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று நிதி அமைச்சகத்துடன் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.அதன்படி, கலந்துரையாடலின் பின்னர் புதிய விலை திருத்தங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.உலக சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் இலங்கையில் எரிவாயு விலைகள் பொதுவாக ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி திருத்தப்படுகின்றன.வரவிருக்கும் விலை திருத்தத்திற்கான பரிந்துரைகள் ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement