• Mar 01 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மே முதல் வாரத்தில்! - அடுத்த வாரத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு

Chithra / Mar 1st 2025, 2:36 pm
image

நிலுவையில் இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மே முதல் வாரத்தில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பூர்வாங்கமாகத் தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் எனத் தெரியவருகின்றது.

தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளின் பட்டியல் விவரங்கள் (மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் பற்றிய விவரங்கள்) இரண்டொரு நாள்களில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் முதலில் வெளியிடப்படும் எனத் தெரிகின்றது.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

அந்த உத்தியோகபூர்வ அறிவித்தலில், அது வெளியான நாளிலிருந்து 14 நாள்கள் கழித்து 18 ஆவது நாள் வரை மூன்றரை நாள்கள் வேட்புமனுக்கள் ஏற்பதற்கான தினங்களாக அறிவிக்கப்படும் எனத் தெரிகின்றது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்தப் பணி பூர்த்தி அடைந்ததும், ஐந்து முதல் ஏழு வார காலம் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடமளித்து அதற்கேற்ற வகையில் தேர்தல் தினம் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

அடுத்த வாரத்தில் தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கை என்ன திகதியில் வெளியாகின்றதோ அதிலிருந்து ஏறத்தாழ சரியாக இரண்டு மாதங்கள் கழித்து மே முதல் வாரத்தில் - பெரும்பாலும் அதே திகதியில் - தேர்தல் நடத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மே முதல் வாரத்தில் - அடுத்த வாரத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு நிலுவையில் இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மே முதல் வாரத்தில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பூர்வாங்கமாகத் தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் எனத் தெரியவருகின்றது.தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளின் பட்டியல் விவரங்கள் (மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் பற்றிய விவரங்கள்) இரண்டொரு நாள்களில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் முதலில் வெளியிடப்படும் எனத் தெரிகின்றது.அதன் பின்னர் சில நாட்கள் கழித்து தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.அந்த உத்தியோகபூர்வ அறிவித்தலில், அது வெளியான நாளிலிருந்து 14 நாள்கள் கழித்து 18 ஆவது நாள் வரை மூன்றரை நாள்கள் வேட்புமனுக்கள் ஏற்பதற்கான தினங்களாக அறிவிக்கப்படும் எனத் தெரிகின்றது.வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்தப் பணி பூர்த்தி அடைந்ததும், ஐந்து முதல் ஏழு வார காலம் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடமளித்து அதற்கேற்ற வகையில் தேர்தல் தினம் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.அடுத்த வாரத்தில் தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கை என்ன திகதியில் வெளியாகின்றதோ அதிலிருந்து ஏறத்தாழ சரியாக இரண்டு மாதங்கள் கழித்து மே முதல் வாரத்தில் - பெரும்பாலும் அதே திகதியில் - தேர்தல் நடத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Advertisement

Advertisement

Advertisement