• Feb 03 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; எதிர்க் கட்சிகள் எடுத்துள்ள தீர்மானம்..!

Sharmi / Feb 3rd 2025, 9:16 am
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பலமுறை கலந்துரையாடியுள்ளனர்.

அந்தவகையில், அடிமட்ட கட்சிகளை சீரமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடலின் போது இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் அடிப்படை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி சபைத் தேர்தல்; எதிர்க் கட்சிகள் எடுத்துள்ள தீர்மானம். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பலமுறை கலந்துரையாடியுள்ளனர்.அந்தவகையில், அடிமட்ட கட்சிகளை சீரமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடலின் போது இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் அடிப்படை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement