• May 18 2024

யாழில் இடம்பெறவுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் வர்த்தகக் கண்காட்சி...!samugammedia

Sharmi / Oct 3rd 2023, 8:19 pm
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கைத் தொழில் அமைச்சின் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட செயலகத்தோடு இணைந்த Mate in the srilanka வர்த்தகக் கண்காட்சியினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவானர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்

Mate in the srilanka வர்த்தகக்கண்காட்சி தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கண்காட்சியை இம் மாதம் 06,07,08 ஆகிய திகதிகளில் நடாத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தின் வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இந்த வர்த்தக கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியத்துவம்  கொடுத்து சுமார் 60 தொடக்கம் 80 வகையான உற்பத்தியாளர்கள் பங்கு பெற்றும் வகையில் இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது 

இந்த கண்காட்சிக்கான அனுமதி இலவசம். வட மாகாணத்தில் இருக்கக்கூடிய உள்ளூர் உற்பத்தியாளர்கள் இதில் பங்குபெற்ற முடியும். தாங்கள் பங்கு பெற்ற விரும்பினால் தேசியத் தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினுடைய மாவட்ட உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். தொலைபேசி இலக்கம் 77 43 46 516 இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு உற்பத்தியாளர்கள் இதில் பங்குபெற்ற முடியும்.

இதில் கடல் சார்ந்த உணவு உற்பத்திகள், தேனி உணவு உற்பத்திகள், பனை மற்றும் தும்புசார் உற்பத்திகள் ஆடை உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள், தோல் உற்பத்திகள், காலணி கைப்பை போன்ற உற்பத்திகள் மற்றும் ஏனைய உள்ளூர் உற்பத்திகள் கண்காட்சி விற்பனைக்குமாக காட்சிப்படுத்தப்படும் என்றார்.

இலங்கை கைத் தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் லக்கதாஸ், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் தனுக்கலியனகம ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


யாழில் இடம்பெறவுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் வர்த்தகக் கண்காட்சி.samugammedia யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கைத் தொழில் அமைச்சின் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட செயலகத்தோடு இணைந்த Mate in the srilanka வர்த்தகக் கண்காட்சியினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவானர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்Mate in the srilanka வர்த்தகக்கண்காட்சி தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த கண்காட்சியை இம் மாதம் 06,07,08 ஆகிய திகதிகளில் நடாத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தின் வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற இருக்கிறது.இந்த வர்த்தக கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியத்துவம்  கொடுத்து சுமார் 60 தொடக்கம் 80 வகையான உற்பத்தியாளர்கள் பங்கு பெற்றும் வகையில் இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது இந்த கண்காட்சிக்கான அனுமதி இலவசம். வட மாகாணத்தில் இருக்கக்கூடிய உள்ளூர் உற்பத்தியாளர்கள் இதில் பங்குபெற்ற முடியும். தாங்கள் பங்கு பெற்ற விரும்பினால் தேசியத் தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினுடைய மாவட்ட உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். தொலைபேசி இலக்கம் 77 43 46 516 இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு உற்பத்தியாளர்கள் இதில் பங்குபெற்ற முடியும்.இதில் கடல் சார்ந்த உணவு உற்பத்திகள், தேனி உணவு உற்பத்திகள், பனை மற்றும் தும்புசார் உற்பத்திகள் ஆடை உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள், தோல் உற்பத்திகள், காலணி கைப்பை போன்ற உற்பத்திகள் மற்றும் ஏனைய உள்ளூர் உற்பத்திகள் கண்காட்சி விற்பனைக்குமாக காட்சிப்படுத்தப்படும் என்றார்.இலங்கை கைத் தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் லக்கதாஸ், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் தனுக்கலியனகம ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement