தந்தையின் இறுதிச் சடங்கிற்காக இலங்கை வந்துள்ள லொஸ்லியா தற்போது குடும்பத்தை சந்திக்க முடியாத நிலை; வெளியாகியுள்ள தகவல்!

1993

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா.

அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் நடிப்பது, படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரம் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார், இந்த செய்தி மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதற்கான சான்றிதழை அந்நாட்டு அரசு வழங்கியுள்ள நிலையில் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை தமிழகத்திலிருக்கும் லொஸ்லியாவும் திருகோணமலைக்கு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார் என செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் லொஸ்லியா இலங்கை வந்தடைந்துள்ளார் எனவும், தற்போது குடும்பத்தவர்களை சந்திக்க முடியாத நிலையிருப்பதாகவும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னரே அவர் குடும்பத்தை சந்திக்க முடியுமெனவும் தெரிவிக்கபப்டுகிறது.

குறித்த தகவலை இலங்கையில் ஊடகவியலாளராக இருக்கின்ற அவரது நண்பர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.