• Nov 26 2024

வவுனியாவில் அதிக சத்தத்துடன் அலறும் ஒலிபெருக்கிகள்...! மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு...!

Sharmi / May 4th 2024, 11:12 am
image

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத் தலங்களிலும், பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார பிரிவினர், நகரசபை, பொலிஸ் திணைக்களம்,மாவட்ட செயலகம் ஆகியவற்றிக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறும் இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் பொலிஸார் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை மறுதினம் 06 ஆம் திகதி ஆரம்பமாகி 15ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அதிக சத்தத்துடன் அலறும் ஒலிபெருக்கிகள். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு. வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத் தலங்களிலும், பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார பிரிவினர், நகரசபை, பொலிஸ் திணைக்களம்,மாவட்ட செயலகம் ஆகியவற்றிக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறும் இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் பொலிஸார் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை மறுதினம் 06 ஆம் திகதி ஆரம்பமாகி 15ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement