பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களை அமோகமாக குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வரை வந்த சோமசேகர் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து விட்டு ஏகப்பட்ட ரசிகர்களின் அன்பை பெற்ற சோமசேகர் வீட்டுக்கு செல்லும் போது, அவருடன் கேபி மற்றும் அர்ச்சனாவின் மகள் சாராவும் வீட்டுக்கு சென்ற வீடியோவை பார்க்கும் போதே உண்மையான அன்பு வெளிப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சோமசேகர், பிக் பாஸ் வீட்டில் எப்போதுமே பாசிட்டிவ் நிறைந்த மனிதராகவே இருந்தார்.

அன்பு கேங்கில் ஐக்கியமாக இருந்தாலும், மற்றவர்களிடம் பகைமையை பாராட்டாமல் நட்பு பாராட்டியே கடைசி வரை ஹேப்பியாக இருந்தவர் சோம் தான்.

ஆனால், கடைசி வரை கேப்டனும் ஆகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட முறை கேப்டன் பதவிக்கான போட்டிக்கு நாமினேட் செய்யப்பட்ட சோமசேகர் கேப்டன் போட்டிக்கான டாஸ்க்கில் போராடி தவறவிட்டனர்.

டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் ஆளாக கிராண்ட் ஃபினாலேவுக்கு சென்ற சோமசேகர், கிராண்ட் ஃபினாலேவில் முதல் ஆளாய் வெளியேறினார்.

பிக் பாஸ் 3வது சீசன் டைட்டில் வின்னர் முகேன் ராவ் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று, சில பல போட்டிகளை நடத்தி ட்விட்ஸ்ட் கொடுத்து சோமசேகரை வெளியேற்றினார்.

கேபி, தாத்தாவின் ரசிகராக தொடங்கி கடைசியில் கேபிரியோம் ரசிகராக மாறினேன் என ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த மூவரது நட்பையும் பாராட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் கமல் கொடுத்த கதர் ஆடைகளை உடுத்திக் கொண்ட அன்பு கேங் 6 பேரும் ஒன்றாக ரீயூனியன் ஆகி எடுத்துக் கொண்ட அட்டகாச புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் ஒலிக்க, சோமசேகர் நீல நிற காரில் தனது வீட்டுக்கு கெத்தாக வந்து இறங்கினார்.

ஆரத்தி எடுத்து சோமசேகரை அவரது குடும்பத்தினர், குட்டி சுட்டீஸ் என அனைவரும் சேர்ந்து வரவேற்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சோமசேகரின் அன்பு தங்கைகளான கேபியும் அர்ச்சனாவின் மகள் சாராவும் சோம் கூடவே அவர் வீட்டுக்கு சென்றது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: