• Apr 18 2025

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி- கடற்றொழிலாளர்கள் அவதானம்!

Tamil nila / Dec 7th 2024, 8:13 pm
image

தென் மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் தமது திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

 அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குறித்த கடற் பரப்புகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரையிலான பலத்த காற்று வீசுவதுடன், பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணித்தியாலத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெறும்.

 இதேவேளை, இந்த நிலைமை காரணமாக எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி- கடற்றொழிலாளர்கள் அவதானம் தென் மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் தமது திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குறித்த கடற் பரப்புகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரையிலான பலத்த காற்று வீசுவதுடன், பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணித்தியாலத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெறும். இதேவேளை, இந்த நிலைமை காரணமாக எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement