• May 10 2025

மாவை தமிழருக்கு மாபெரும் சரித்திரம்; அஞ்சலி செலுத்திய பின் சுமந்திரன் தெரிவிப்பு..!

Sharmi / Feb 2nd 2025, 12:15 am
image

"தேசம் என்று சொல்லுகின்றபோது மக்களும் நிலமும் முக்கியமானவை. மக்களும் நிலமும் இல்லாமல் ஒரு தேசம் கிடையாது. அந்த அடிப்படையில் மக்களும் நிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக அயாராது உழைத்தவர் மாவை சேனாதிராஜா. மாவை அண்ணணிண் சரித்திரம் என்பது தமிழ் மக்களின் வரலாற்றோடு சேர்ந்து பின்னிப் பிணைந்தது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு அவரது இல்லத்தில்  அஞ்சலி செலுத்திவிட்டு வெளியேறும்போதே ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ் மக்களுடைய அரசியல் என்று வருகின்றபோது மாவை சேனாதிராஜாவின் சரித்திரம் மக்களுடைய அரசியல் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. எந்தவிதத்திலும் பிரிக்க முடியாதது. எங்களுடைய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு என்னவிதமாக தமிழர் அரசியல் நகர்ந்து வந்தது என்பதற்கு அவருடைய வாழ்க்கையே அதனோடு இணைந்த சரித்திரமாக இருக்கின்றது.

1960 ஆம் ஆண்டுகளிலே சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கு ஊடாக அவர் அரசியலுக்கு வந்தவர். அதன் பின்னர் 1970 களிலே முதலாவது புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது அதிலே தமிழ மக்கள் தேசிய வாழ்க்கையில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டார்கள். அந்தக் காலங்களில் எல்லாம அதை முற்றாக நிராகரித்து அதற்கு எதிராகப்  போராட்டம் நடத்திய இளைஞர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக அவர் இருந்தார்.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து இந்த மூவர்களுடைய பெயர்கள்தான் நினைவுக்கு வரும். அதாவது காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராஜா.... இந்த மூன்று பேரின் பெயர் ஒலிக்காத நாள் கிடையாது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் சுதந்திரன் பத்திரிகை வெளிவருகின்றபோது அவர்களுடைய பெயர்கள். அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தடவையில் 42 தமிழ் இளைஞர்கள் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் வெறுமனே  அரசியல் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தார்கள். நாங்கள் இன்றைக்கு அரசியல் கைதிகளைப் பற்றி சொல்லுகின்றோம்.

1976 ஆம் ஆண்டு அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு நடக்க இருந்த வேளையில் இவர்கள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த காலத்தை மீட்டுப் பார்க்கின்றேன். சுதந்திரன் பத்திரிகையிலே 42 மெழுகுதிரிகள் எரிந்து நூர்த்துப் போகின்ற படம் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது.

இவர்களிலே ஐந்து பேர் தலைவர்கள். அவர்கள் இணங்கினால்தான் உண்ணாவிரதம் கைவிடப்படும் என்று தீர்மானித்த காரணத்தினாலே ஐந்து பேரையும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றி விட்டார்கள். அதில் மாவை அண்ணண் மோகம்பரை சிறைச்சாலையில். அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேச முடியவில்லை. மற்றைய நான்கு பேரும் காலக் கிரமத்திலே உணவூட்டி ஊசி செலுத்தி அவர்களை நிமிர வைத்து விட்டார்கள். ஆனால், மாவை அண்ணண்தான் மிகக்  கூடிய காலம் சிறையில் வாழ்ந்து வந்திருந்தார். அவரை இரத்தத்தால் திலகமிட்டு தமிழ் மக்கள் வரவேற்றனர்.

இவையெல்லாம் எமது தமிழ்த் தேசிய அரசியல் வாழ்க்கையிலே அடிப்படையான அத்திவாரங்களாக இருக்கும் விடயங்கள். மாவை அண்ணன் எமது தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஓர் அத்திவாரக்கல்லாக இருக்கின்றார். இன்றைய சூழலில் இருந்து பார்த்தால் அத்திவாரத்தில் ஓர் மூலக் கல்லாகக் காணலாம்.

தமிழரசுக் கட்சியின் தலைமையை அவர் எடுத்தார். அதனைப் பாதுகாத்தார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியோடு இரண்டறக் கலந்திருந்த காரணத்தால் அது தேர்தலில் போட்டியிடவில்லை. புறந்தள்ளி வைக்கப்பட்டதாக இருந்தாலும்கூட கட்சியைப் பாதுகாத்து வைத்திருந்தார். அதனால்தான் 2003 ஆம் ஆண்டு ஒரு பிரச்சினை வந்தபோது அந்தவேளையிலே தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் முகம்கொடுக்க முடியாத சூழல் வந்தபோது கட்சிக்காக நான் வாதாடினேன். இருப்பினும் மாவை அண்ணை தமிழரசுக் கட்சியைப் பாதுகாத்து வைத்திருந்தமையால் உடனடியாகத் தமிழரசுக் கட்சியின் சினத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடியதாக இருந்தது.

இந்தக் காலத்திலேதான் நான் அவரை நேரடியாகச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. ஏனென்றால் சட்டத்தரணி கணேசலிங்கம் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர். தன்னுடைய வீடு விடுவிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அப்போது மாவை அண்ணரும் கணேசலிங்கமும் எனது வீட்டுக்கு வந்து இப்படியாக நடந்து விட்டது, சட்ட நடவடிக்கை எடுத்து இந்த நிலங்களை மீட்க வேண்டும் எனக் கேட்டார். அதன்போது நான் கூறினேன் விடுவிக்கப்படாது விட்டாலும் குறைந்தது 100 பேராவது வழக்கு வைத்தால் ஓர் அடையாளமாக இருக்கும் எனத் தெரிவித்தேன். அதற்கு அந்த இருவரும் யாழ்ப்பாணம் வந்து மக்களைத் திரட்ட முயன்றபோது மேலும் இருவர் மட்டுமே முன்வந்தார்கள். இதில் மூவரின் பெயர்களில் வழக்குப் போட்டோம். இதில் ஒருவர் மரணமடைய இரண்டாவது வழக்காளரின் வீடு விடுவிக்கப்பட்ட நிலையில் மாவை அண்ணையின் வழக்கு மட்டுமே தொடர்ந்து சென்றது. அந்த வழக்கு நடத்தியே வலிகாமம் வடக்கில் இத்தனை ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. தனி ஒருவனாக துணிந்து அந்தக் காலத்திலேயே தனது பெயரில் அந்த வழக்கை அவர் தாக்கல் செய்தார்.

2013 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ இன்னொரு பகுதியைச் சுவீகரிக்க முயன்றபோதும் மாவை அண்ணை என்னை அழைத்து வந்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் உள்ள இடத்தில் வைத்து ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அதன்போது 10 ஆயிரம் பேரை வழக்கு வைக்க அழைத்தோம். இருப்பினும் 2 ஆயிரத்து 176 பேர் முன் வந்தார்கள். வலிகாமம் வடக்கு சுகிர்தன் அத்தனை உறுதிகளையும பரிசீலனை செய்து அனுப்பி வைத்தார். வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அதன் காரணமாகவே இந்தப் பிரதேசம் விடுவிக்கப்பட்டது.

தேசம் என்று சொல்லுகின்றபோது மக்களும் நிலமும் முக்கியமானவை. மக்களும் நிலமும் இல்லாமல் ஒரு தேசம் கிடையாது. அந்த அடிப்படையில் மக்களும் நிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக அயாராது உழைத்தவர் மாவை சேனாதிராஜா. அவ்வாறு கண்ணும் கருத்துமாக நின்று அவர் செயற்பட்டதன் காரணத்தினாலே இன்றைக்கு இந்த மண்ணிலே நாங்கள் நிற்கக்  கூடியதாக இருக்கின்றது. அவரின் இறுதிக்கிரியைகளை இந்த இடத்தில் நடத்தக் கூடியதாக உள்ளது.

இன்று நான் வரும்போது மக்கள் வீடுகள் கட்டி வாழ்வதைப் பார்த்தேன். இந்த வலிகாமம் வடக்கு மக்கள் சந்தோசமாக வாழ அடிகோலியாக இருந்தவர் அண்ணண் மாவை. இப்படியாகப் பல விடயங்களைச்  சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியத்தின் ஓர் அடையாளமாக - அதனுடைய அத்திவாரமாகப் பயணித்தவர் அண்ணண் மாவை. இன்றைக்கு அவர் மரணித்திருக்கின்றார். மாவை அண்ணணிண் சரித்திரம் என்பது தமிழ் மக்களின் வரலாற்றோடு சேர்ந்து பின்னிப் பிணைந்தது எனவும் தெரிவித்தார்.


மாவை தமிழருக்கு மாபெரும் சரித்திரம்; அஞ்சலி செலுத்திய பின் சுமந்திரன் தெரிவிப்பு. "தேசம் என்று சொல்லுகின்றபோது மக்களும் நிலமும் முக்கியமானவை. மக்களும் நிலமும் இல்லாமல் ஒரு தேசம் கிடையாது. அந்த அடிப்படையில் மக்களும் நிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக அயாராது உழைத்தவர் மாவை சேனாதிராஜா. மாவை அண்ணணிண் சரித்திரம் என்பது தமிழ் மக்களின் வரலாற்றோடு சேர்ந்து பின்னிப் பிணைந்தது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு அவரது இல்லத்தில்  அஞ்சலி செலுத்திவிட்டு வெளியேறும்போதே ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,"தமிழ் மக்களுடைய அரசியல் என்று வருகின்றபோது மாவை சேனாதிராஜாவின் சரித்திரம் மக்களுடைய அரசியல் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. எந்தவிதத்திலும் பிரிக்க முடியாதது. எங்களுடைய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு என்னவிதமாக தமிழர் அரசியல் நகர்ந்து வந்தது என்பதற்கு அவருடைய வாழ்க்கையே அதனோடு இணைந்த சரித்திரமாக இருக்கின்றது.1960 ஆம் ஆண்டுகளிலே சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கு ஊடாக அவர் அரசியலுக்கு வந்தவர். அதன் பின்னர் 1970 களிலே முதலாவது புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது அதிலே தமிழ மக்கள் தேசிய வாழ்க்கையில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டார்கள். அந்தக் காலங்களில் எல்லாம அதை முற்றாக நிராகரித்து அதற்கு எதிராகப்  போராட்டம் நடத்திய இளைஞர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக அவர் இருந்தார்.எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து இந்த மூவர்களுடைய பெயர்கள்தான் நினைவுக்கு வரும். அதாவது காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராஜா. இந்த மூன்று பேரின் பெயர் ஒலிக்காத நாள் கிடையாது.ஒவ்வொரு சனிக்கிழமையும் சுதந்திரன் பத்திரிகை வெளிவருகின்றபோது அவர்களுடைய பெயர்கள். அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தடவையில் 42 தமிழ் இளைஞர்கள் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் வெறுமனே  அரசியல் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தார்கள். நாங்கள் இன்றைக்கு அரசியல் கைதிகளைப் பற்றி சொல்லுகின்றோம்.1976 ஆம் ஆண்டு அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு நடக்க இருந்த வேளையில் இவர்கள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த காலத்தை மீட்டுப் பார்க்கின்றேன். சுதந்திரன் பத்திரிகையிலே 42 மெழுகுதிரிகள் எரிந்து நூர்த்துப் போகின்ற படம் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது.இவர்களிலே ஐந்து பேர் தலைவர்கள். அவர்கள் இணங்கினால்தான் உண்ணாவிரதம் கைவிடப்படும் என்று தீர்மானித்த காரணத்தினாலே ஐந்து பேரையும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றி விட்டார்கள். அதில் மாவை அண்ணண் மோகம்பரை சிறைச்சாலையில். அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேச முடியவில்லை. மற்றைய நான்கு பேரும் காலக் கிரமத்திலே உணவூட்டி ஊசி செலுத்தி அவர்களை நிமிர வைத்து விட்டார்கள். ஆனால், மாவை அண்ணண்தான் மிகக்  கூடிய காலம் சிறையில் வாழ்ந்து வந்திருந்தார். அவரை இரத்தத்தால் திலகமிட்டு தமிழ் மக்கள் வரவேற்றனர்.இவையெல்லாம் எமது தமிழ்த் தேசிய அரசியல் வாழ்க்கையிலே அடிப்படையான அத்திவாரங்களாக இருக்கும் விடயங்கள். மாவை அண்ணன் எமது தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஓர் அத்திவாரக்கல்லாக இருக்கின்றார். இன்றைய சூழலில் இருந்து பார்த்தால் அத்திவாரத்தில் ஓர் மூலக் கல்லாகக் காணலாம்.தமிழரசுக் கட்சியின் தலைமையை அவர் எடுத்தார். அதனைப் பாதுகாத்தார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியோடு இரண்டறக் கலந்திருந்த காரணத்தால் அது தேர்தலில் போட்டியிடவில்லை. புறந்தள்ளி வைக்கப்பட்டதாக இருந்தாலும்கூட கட்சியைப் பாதுகாத்து வைத்திருந்தார். அதனால்தான் 2003 ஆம் ஆண்டு ஒரு பிரச்சினை வந்தபோது அந்தவேளையிலே தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் முகம்கொடுக்க முடியாத சூழல் வந்தபோது கட்சிக்காக நான் வாதாடினேன். இருப்பினும் மாவை அண்ணை தமிழரசுக் கட்சியைப் பாதுகாத்து வைத்திருந்தமையால் உடனடியாகத் தமிழரசுக் கட்சியின் சினத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடியதாக இருந்தது.இந்தக் காலத்திலேதான் நான் அவரை நேரடியாகச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. ஏனென்றால் சட்டத்தரணி கணேசலிங்கம் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர். தன்னுடைய வீடு விடுவிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அப்போது மாவை அண்ணரும் கணேசலிங்கமும் எனது வீட்டுக்கு வந்து இப்படியாக நடந்து விட்டது, சட்ட நடவடிக்கை எடுத்து இந்த நிலங்களை மீட்க வேண்டும் எனக் கேட்டார். அதன்போது நான் கூறினேன் விடுவிக்கப்படாது விட்டாலும் குறைந்தது 100 பேராவது வழக்கு வைத்தால் ஓர் அடையாளமாக இருக்கும் எனத் தெரிவித்தேன். அதற்கு அந்த இருவரும் யாழ்ப்பாணம் வந்து மக்களைத் திரட்ட முயன்றபோது மேலும் இருவர் மட்டுமே முன்வந்தார்கள். இதில் மூவரின் பெயர்களில் வழக்குப் போட்டோம். இதில் ஒருவர் மரணமடைய இரண்டாவது வழக்காளரின் வீடு விடுவிக்கப்பட்ட நிலையில் மாவை அண்ணையின் வழக்கு மட்டுமே தொடர்ந்து சென்றது. அந்த வழக்கு நடத்தியே வலிகாமம் வடக்கில் இத்தனை ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. தனி ஒருவனாக துணிந்து அந்தக் காலத்திலேயே தனது பெயரில் அந்த வழக்கை அவர் தாக்கல் செய்தார்.2013 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ இன்னொரு பகுதியைச் சுவீகரிக்க முயன்றபோதும் மாவை அண்ணை என்னை அழைத்து வந்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் உள்ள இடத்தில் வைத்து ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அதன்போது 10 ஆயிரம் பேரை வழக்கு வைக்க அழைத்தோம். இருப்பினும் 2 ஆயிரத்து 176 பேர் முன் வந்தார்கள். வலிகாமம் வடக்கு சுகிர்தன் அத்தனை உறுதிகளையும பரிசீலனை செய்து அனுப்பி வைத்தார். வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அதன் காரணமாகவே இந்தப் பிரதேசம் விடுவிக்கப்பட்டது.தேசம் என்று சொல்லுகின்றபோது மக்களும் நிலமும் முக்கியமானவை. மக்களும் நிலமும் இல்லாமல் ஒரு தேசம் கிடையாது. அந்த அடிப்படையில் மக்களும் நிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக அயாராது உழைத்தவர் மாவை சேனாதிராஜா. அவ்வாறு கண்ணும் கருத்துமாக நின்று அவர் செயற்பட்டதன் காரணத்தினாலே இன்றைக்கு இந்த மண்ணிலே நாங்கள் நிற்கக்  கூடியதாக இருக்கின்றது. அவரின் இறுதிக்கிரியைகளை இந்த இடத்தில் நடத்தக் கூடியதாக உள்ளது.இன்று நான் வரும்போது மக்கள் வீடுகள் கட்டி வாழ்வதைப் பார்த்தேன். இந்த வலிகாமம் வடக்கு மக்கள் சந்தோசமாக வாழ அடிகோலியாக இருந்தவர் அண்ணண் மாவை. இப்படியாகப் பல விடயங்களைச்  சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியத்தின் ஓர் அடையாளமாக - அதனுடைய அத்திவாரமாகப் பயணித்தவர் அண்ணண் மாவை. இன்றைக்கு அவர் மரணித்திருக்கின்றார். மாவை அண்ணணிண் சரித்திரம் என்பது தமிழ் மக்களின் வரலாற்றோடு சேர்ந்து பின்னிப் பிணைந்தது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now