• Sep 22 2024

நுவரெலியா தபால் நிலையத்தை பாதுகாக்குமாறு மகஜர் கையளிப்பு ! samugammedia

Tamil nila / Nov 13th 2023, 7:35 pm
image

Advertisement

நுவரெலியா தபால் நிலையத்தை வேறு எந்தவொரு வியாபார நோக்கத்திற்கு வழங்காது பாதுகாக்குமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

மதத்தலைவர்கள் குழுவொன்று நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் குறித்த மகஜரை கையளித்துள்ளது.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள், பொதுத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் மக்களின் கையொப்பங்களுடன் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்குமாறும் குறித்த குழுவினர் மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலா விடுதிகளை ஆரம்பிக்கும் நோக்கில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் என்பன விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்களினால் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

நுவரெலியா தபால் நிலையத்தை பாதுகாக்குமாறு மகஜர் கையளிப்பு samugammedia நுவரெலியா தபால் நிலையத்தை வேறு எந்தவொரு வியாபார நோக்கத்திற்கு வழங்காது பாதுகாக்குமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.மதத்தலைவர்கள் குழுவொன்று நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் குறித்த மகஜரை கையளித்துள்ளது.தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள், பொதுத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் மக்களின் கையொப்பங்களுடன் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த மகஜரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்குமாறும் குறித்த குழுவினர் மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.சுற்றுலா விடுதிகளை ஆரம்பிக்கும் நோக்கில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் என்பன விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்களினால் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து தபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement