• Nov 17 2024

தலைமன்னார் கடற்பரப்பில் சிக்கிய 08 இந்திய மீனவர்களுக்கு நீதவான் வழங்கிய உத்தரவு

Chithra / Aug 27th 2024, 3:13 pm
image

 

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் செப்டெம்பர் 5 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டது.

இலங்கை கடற்பரப்பில் நேற்று இரவு சட்ட விரோதமாக ஒரு விசைப் படகுடன் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்,

குறித்த 8 மீனவர்களையும் கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


தலைமன்னார் கடற்பரப்பில் சிக்கிய 08 இந்திய மீனவர்களுக்கு நீதவான் வழங்கிய உத்தரவு  இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் செப்டெம்பர் 5 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டது.இலங்கை கடற்பரப்பில் நேற்று இரவு சட்ட விரோதமாக ஒரு விசைப் படகுடன் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்,குறித்த 8 மீனவர்களையும் கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement