• May 14 2024

மலிவான விலையில் முட்டை வாங்கி மகிழ்ந்த மஹிந்த!

Sharmi / Dec 28th 2022, 8:51 pm
image

Advertisement

55 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பத்தரமுல்லையில் மலிவான முட்டைப் பொதி ஒன்றை கொள்வனவு செய்தார்.

சந்தையில் முட்டையின் விலை 65 – 70 ரூபாவாக அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, 55 ரூபா விலையில் நுகர்வோருக்கு முட்டை விற்பனையை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய , கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் முட்டை விற்பனை செய்யும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகின.

10 லொறிகளில் 10 இடங்களில் 04 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இம்மாதம் 30ஆம் திகதி காலி மற்றும் கண்டி நகரப் பகுதிகளில் முட்டை விற்பனை செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மலிவான விலையில் முட்டை வாங்கி மகிழ்ந்த மஹிந்த 55 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பத்தரமுல்லையில் மலிவான முட்டைப் பொதி ஒன்றை கொள்வனவு செய்தார்.சந்தையில் முட்டையின் விலை 65 – 70 ரூபாவாக அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, 55 ரூபா விலையில் நுகர்வோருக்கு முட்டை விற்பனையை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.அதற்கமைய , கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் முட்டை விற்பனை செய்யும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகின.10 லொறிகளில் 10 இடங்களில் 04 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும், இம்மாதம் 30ஆம் திகதி காலி மற்றும் கண்டி நகரப் பகுதிகளில் முட்டை விற்பனை செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement